வால்வோவுக்கு போட்டியாக வரும் டாடாவின் புதிய இன்டர்சிட்டி சொகுசு பஸ்!

By Saravana

வால்வோ, ஸ்கானியா நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய சொகுசு பஸ் மாடல்களை டாடா மோட்டார்ஸ் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

டாடா மார்கோபோலோ மேக்னா என்ற பெயரில் இந்த புதிய சொகுசு பஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். பயணிகளுக்கான சொகுசு, பாதுகாப்பு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனம் என அனைத்து விதத்திலும் இந்த புதிய டாடா சொகுசு பஸ்கள் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை கொடுக்கும்.

மாடல்கள்

மாடல்கள்

டாடா மார்கோபோலோ மேக்னா பிராண்டில் 2 ஆக்சில் மற்றும் 3 ஆக்சில் சொகுசு பஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில், 2 ஆக்சில் சொகுசு பஸ்கள் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. 3 ஆக்சில் சொகுசு பஸ் தயாரிப்பு தற்போது நடந்து வருவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

சிறப்பான வசதிகள்

சிறப்பான வசதிகள்

இந்த பஸ்கள் நீண்ட தூர வழித்தடங்களில் இயக்குவதற்கான சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். 2+2 என்ற லே அவுட்டில் இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். மொபைல்சார்ஜர், அவசர கால வழிகள், தீத்தடுப்பு சாதனம் ஆகியவற்றுடன் உட்புறம் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

குளுகுளு வசதி

குளுகுளு வசதி

இந்த சொகுசு பஸ் 30 முதல் 50 பேர் பயணிக்கும் வசதி கொண்ட இருக்கை அமைப்புகள் கொண்ட மாடல்களில், வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப கிடைக்கும். இந்த பஸ்கலிந் டாப் மாடலில் மிகவும் சொகுசான இருக்கைகள், ஏசி வசதி ஆகியவற்றுடன் வருகிறது.

விசேஷ பாகங்கள்

விசேஷ பாகங்கள்

தீப்பிடிக்காத தன்மை கொண்ட பாகங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட உள்ளன. தீப்பிடிக்காத ப்ளைவுட் மர பாகங்கள் மற்றும் 12 மிமீ தடிமன் கொண்ட வழுக்காத வினைல் தரைதளத்துடன் கட்டமைக்கப்படும். அத்துடன், உலோக கூரைக்கு பதிலாக, ஃபைபர் கூரை கொண்டதாக தயாரிக்கப்பட உள்ளது.

பஸ் உற்பத்தி

பஸ் உற்பத்தி

கர்நாடக மாநிலம், தார்வாட் நகரில் அமைந்திருக்கும் டாடா ஆலையில் இந்த பஸ்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த சொகுசு பஸ்களுக்கான சேஸீ மட்டும் புனேயில் உள்ள டாடா ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

வரும் அக்டோபர் முதல் டிசம்பர் இடையில் இந்த புதிய சொகுசு பஸ்களை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

சவாலான விலை

சவாலான விலை

வால்வோ, ஸ்கானியா பஸ்களைவிட டாடா மார்கோபோலோ மேக்னா சொகுசு பஸ்கள் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கும் என்பதுடன், ரூ.45 லட்சம் முதல் ரூ.50 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதால், வால்வோ, ஸ்கானியா நிறுவனங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும்.

Most Read Articles
English summary
Tata Marcopolo Magna luxury bus To be launched in India Soon.
Story first published: Thursday, September 3, 2015, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X