மிகவும் நம்பகமான ஹேட்ச்பேக் கார் டாடா நானோ... சத்தியமா நான் சொல்லலை!

By Saravana

இந்தியாவின் அதிக நம்பகத்தன்மை வாய்ந்த ஹேட்ச்பேக் கார் மாடல் என்ற பெருமையை தொடர்ந்து மூன்றாவது முறையாக பெற்றிருக்கிறது டாடா நானோ கார். பலரும் டாடா நானோ காரை குறைகூறி வரும் நிலையில், இந்த ஆய்வு அறிக்கை டாடா மோட்டார்ஸ்க்கு புதுத்தெம்பை கொடுக்கும் டானிக்காக அமைந்துள்ளது.

பிராண்டு டிரஸ்ட் ரிப்போர்ட் அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில், டாடா நானோ காரை சிறந்த நம்பகத்தன்மை வாய்ந்த காராக குறிப்பிட்டிருக்கிறது. டாடா நானோ காருக்கு கிடைத்திருக்கு்ம் இந்த அங்கீகாரத்தை மிகவும் பெருமையாக கருதுவதாக டாடா மோட்டார்ஸ் மார்க்கெட்டிங் தொடர்புதுறை தலைமை அதிகாரி டெல்னா அவாரி கூறியிருக்கிறார்.

மேலும், பணத்திற்கு சிறந்த மதிப்பை தரும் மாடல் என்றும் நானோ காரை பற்றி அவர் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், நானோ காரில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


அந்த டிசைன் மட்டும்...

அந்த டிசைன் மட்டும்...

டிசைன் மட்டும் வேறு மாதிரியாக அல்லது கச்சிதமாக இருந்திருந்தால், நானோ காரின் தலையெழுத்து வேறு மாதிரி இருந்திருக்கும். டிசைனில் டாடா கோட்டை விட்டதுதான் இதுவரை நானோ விற்பனையில் குறுக்கே நிற்கும் தடைக்கல். ஆனால், இந்த விலைக்கு ஏற்ற சரியான மாடலாகவே இதனை பலரும் குறிப்பிடுகின்றனர். நானோ காரின் இதர சிறப்புகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் நினைவுப்படுத்திக்கொள்ளலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 38 பிஎச்பி பவரையும், 51 என்எம் டார்க்கையும் வழங்கும் 624சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சினுடன் 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆற்றலை பின் சக்கரங்களுக்கு செலுத்துகிறது. இந்த காரின் பெரும் குறைகளில் ஒன்று, எக்சாஸ்ட் சப்தம். லோடு ஆட்டோரிக்ஷா போன்று இருப்பதாக பலரும் அங்கலாய்க்கின்றனர்.

 பெட்ரோல், சிஎன்ஜி

பெட்ரோல், சிஎன்ஜி

நானோ கார் தற்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் காரில் அதிக மைலேஜ் தரும் காராகவும் குறிப்பிடலாம். பெட்ரோல் மாடல் மூன்று வித வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது.

 பவர் ஸ்டீயரிங்

பவர் ஸ்டீயரிங்

பவர் ஸ்டீயரிங் இல்லாததால், பெண் வாடிக்கையாளர்களுக்கு பெரிய உபத்திரத்தை ஸ்டீயரிங் தந்து கொண்டிருந்தது. அதனை களைந்து சமீபத்தில் பவர் ஸ்டீயரிங் கொண்ட நானோ ட்விஸ்ட் மாடல் விற்பனைக்கு வந்திருக்கிறது. தவிர, ஏசி வசதியும் உள்ளதும் நானோ காருக்கு கூடுதல் மதிப்பான விஷயம்.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் 18 கிமீ மைலேஜை சராசரியாக வழங்கும்.

ஒரு லட்ச ரூபாய் கார் இல்ல...

ஒரு லட்ச ரூபாய் கார் இல்ல...

டாடா நானோ கார் சென்னையில் ரூ.2.34 லட்சம் ஆன்ரோடு விலை முதல் கிடைக்கிறது.

 யாருக்கு பெஸ்ட்?

யாருக்கு பெஸ்ட்?

நகர்ப்புரத்தில் ஓட்டுவதற்காக இரண்டாவது கார் வாங்க திட்டமிடுபவர்கள், மனைவிக்காக ஓர் கார் வாங்க விருப்பப்படுவர்கள், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இந்த கார் சிறப்பான சாய்ஸாக இருக்கும். அதிக மைலேஜ், போதுமான இடவசதி கொண்டது இதன் ப்ளஸ் பாயிண்ட்டுகள்.

Most Read Articles
English summary
Brand Trust Report, India Study, 2015 has awarded the Tata Nano, as the most trusted hatchback. This is the third time in a row that the small car by Tata has won this award.
Story first published: Monday, March 2, 2015, 17:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X