பிப்ரவரி விற்பனையில் இந்தியாவின் டாப்- 10 கார் நிறுவனங்கள்!

By Saravana

உற்பத்தி வரிச்சலுகை நீக்கப்பட்டாலும், புத்தாண்டில் கார் வாங்க காத்திருந்தவர்களால் ஜனவரியில் பல கார் நிறுவனங்கள் நல்ல விற்பனையை பதிவு செய்தன. ஆனால், மாருதி, ஹூண்டாய் தவிர்த்து பல நிறுவனங்களின் கார் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் குறைந்துபோனது.

பட்ஜெட்டில் விலை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால் கார் விற்பனை அதிகரிக்கும் என பல நிறுவனங்கள் கணக்கு போட்டிருந்தன. ஆனால், அந்த கணக்கு நிற்கவில்லை. இதன் காரணமாக, எதிர்பார்த்ததைவிட பிப்ரவரி பல கார் நிறுவனங்களுக்கு சரிவு முகமாக இருந்தது. பிப்ரவரியில் உள்நாட்டு கார் விற்பனை மூலம் டாப்- 10 இடங்களை பிடித்த கார் நிறுவனங்களை ஸ்லைடரில் காணலாம்.


10. ரெனோ

10. ரெனோ

கடந்த மாதம் 11வது இடத்தில் இருந்த ரெனோ கார் நிறுவனம் கடந்த மாதம் 10வது இடத்தை பிடித்தது. கடந்த ஜனவரியில் 3,203 கார்களை விற்றிருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 3,500 கார்களை விற்பனை செய்திருக்கிறது.

9. ஜெனரல் மோட்டார்ஸ்

9. ஜெனரல் மோட்டார்ஸ்

கடந்த ஜனவரியில் 8வது இடத்தில் இருந்த ஜெனரல் மோட்டார்ஸ் கடந்த மாதம் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த ஜனவரியில் 4,410 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 3,806 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

8.ஃபோக்ஸ்வேகன்

8.ஃபோக்ஸ்வேகன்

கடந்த ஜனவரியில் 9வது இடத்தில் இருந்து, கடந்த மாதம் 8வது இடத்துக்கு ஒருபடி முன்னேறியிருக்கிறது ஃபோக்ஸ்வேகன். கடந்த ஜனவரியில் 3,735 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 3,852 கார்களை விற்பனை செய்திருக்கிறது. ஒரு இடம் முன்னேறினாலும், விற்பனையில் பெரிய அளவில் மாற்றங்கள் தென்படவில்லை.

7. ஃபோர்டு

7. ஃபோர்டு

கடந்த ஜனவரி மாதம் போன்று, பிப்ரவரியிலும் அதே 7வது இடத்தை தக்க வைத்துக்கொண்டிருந்தாலும், ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஜனவரியில் 6,647 கார்களை விற்பனை செய்திருந்த ஃபோர்டு கார் நிறுவனம், கடந்த மாதம் 5,959 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

6.டொயோட்டா

6.டொயோட்டா

ஜனவரியை போன்றே, பிப்ரவரியில் தனது 6வது இடத்தை தக்கவைத்தது டொயோட்டா. கடந்த ஜனவரி மாதத்தில் 12,650 கார்களை விற்பனை செய்திருந்த டொயோட்டா, கடந்த மாதம் 11,802 கார்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது.

5. டாடா மோட்டார்ஸ்

5. டாடா மோட்டார்ஸ்

ஜனவரியிலும், பிப்ரவரியிலும் 5வது இடத்துக்கு அதிபதியாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. கடந்த ஜனவரி மாதம் 13,047 கார்களை விற்பனை செய்திருந்த டாடா மோட்டார்ஸ், கடந்த மாதம் 13,767 கார்களை விற்பனை செய்து, சற்று வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

 4. ஹோண்டா கார்ஸ்

4. ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார் நிறுவனமும் 4வது இடத்தை தக்க வைத்தது. கடந்த ஜனவரியில் 18,331 கார்களை விற்பனை செய்திருந்த ஹோண்டா கார் நிறுவனம், கடந்த மாதம் 16,902 கார்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரி விற்பனையுடன் ஒப்பிடும்போது, ஹோண்டா கார் நிறுவனத்தின் விற்பனை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

3. மஹிந்திரா

3. மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் 3வது இடத்தை தக்க வைத்தது. கடந்த ஜனவரியில் 19,573 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 18,103 பயணிகள் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது.

2. ஹூண்டாய் மோட்டார்ஸ்

2. ஹூண்டாய் மோட்டார்ஸ்

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு புத்தாண்டு சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் 34,780 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 37,305 கார்களை விற்பனை செய்திருக்கிறது.

1. மாருதி சுஸுகி

1. மாருதி சுஸுகி

கார் மார்க்கெட்டில் 50 சதவீதத்துக்கும் நெருக்கமான கார்களை விற்பனை செய்யும் மாருதிதான் எப்போதுமே நம்பர்-1 என்பது அறிந்ததுதான். ஹூண்டாய் போன்றே மாருதி கார் நிறுவனத்திற்கும் புத்தாண்டு சிறப்பானதாகவே இருக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் 1,05,559 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 1,07,892 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

கடைசி இடங்கள்

கடைசி இடங்கள்

டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்க முடியாத நிறுவனங்கள் நிசான் மற்றும் ஃபியட். கடந்த ஜனவரியில் 4,267 கார்களை விற்பனை செய்திருந்த நிசான் நிறுவனம், கடந்த மாதம் 3,448 கார்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. தனது பங்காளி ரெனோவிடம் 10வது இடத்தை இழந்தது. இதைவிட மோசமான நிலைமையில் இருப்பது ஃபியட் கார் நிறுவனம். கடந்த ஜனவரியில் 862 கார்களையும், பிப்ரவரியில் 591 கார்களையும் விற்று பரிதாபகரமான நிலையில் உள்ளது ஃபியட்.

Most Read Articles
English summary
According to industry reports, Local sales at most car makers in India fell in February from the previous month.
Story first published: Tuesday, March 3, 2015, 14:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X