தீபாவளி ஸ்பெஷல்: ஒவ்வொரு செக்மென்ட்டிலும் டாப் - 3 கார்கள்!

By Saravana

பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு, எந்த காரை தேர்வு செய்வது என்பதில் பெரும் குழப்பம் ஏற்படுவது இயல்பு. சில செக்மென்ட்டில் ஏராளமான கார் மாடல்கள் இருப்பதும், அவர்களை பெரும் குழப்பத்தில் தவிக்க விடுகிறது.

அவர்களது குழப்பத்தை போக்கும் விதத்தில், ஒவ்வொரு செக்மென்ட்டிலும் டிசைன், விலை, வசதிகள், எஞ்சின் ஆப்ஷன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் சேவை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் 3 சிறந்த மாடல்களை பட்டியலிட்டிருக்கிறோம். இது உங்களுக்கு பயன் தரும் என்று நம்புகிறோம். வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

01. ஹூண்டாய் க்ரெட்டா

01. ஹூண்டாய் க்ரெட்டா

டிசைன், எஞ்சின் ஆப்ஷன், விலை, வசதிகள் என அனைத்திலும் நிறைவான மாடல். வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பதன் மூலமாக, காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் விற்பனையில் நம்பர் 1 இடத்தில் அமர்ந்து விட்டது.

ஹூண்டாய் க்ரெட்டா முழு விபரம்

 02. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

02. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஒரு பிரிமியம் கார் போன்ற ஃபீல் தரும் தோற்றம், வசதிகள், சிறப்பான எஞ்சின் ஆப்ஷன்கள் என்பதோடு, போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது மிக குறைவான விலை போன்றவை இந்த எஸ்யூவி வகை மாடலுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றுத் தருகிறது. இது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மாடல். எனவே, நெருக்கடி மிகுந்த நகரங்களுக்கும் மிக ஏற்றது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முழு விபரம்

03. ரெனோ டஸ்ட்டர்

03. ரெனோ டஸ்ட்டர்

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் பெரும் வெற்றியை ருசித்த டஸ்ட்டருக்கு இப்போது போட்டியாளர்களால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், அனைத்து மாடல்களையும் ஒப்பிடும்போது, இடவசதி, எஞ்சின் ஆப்ஷன், தோற்றம் ஆகியவற்றில் ஓர் சிறந்த தேர்வாக இருக்கும்.

ரெனோ டஸ்ட்டர் முழு விபரம்

 01. மாருதி எர்டிகா

01. மாருதி எர்டிகா

அடக்கமான வகை எம்பிவி கார் மார்க்கெட்டில் யோசிக்காமல் வாங்குவதற்கான மாடல் மாருதி எர்டிகா. விலை, வசதிகள், தோற்றம் என அனைத்திலும் சிறப்பானதோடு, பராமரிப்பு செலவீனம் மற்றும் மாருதியின் சிறப்பான விற்பனைக்கு பிந்தைய சேவையும் இந்த காரின் மதிப்பை ஒருபடி கூட்டுகிறது. ஆனால், மூன்றாவது இருக்கை இடவசதி அனைவரையும் கவராது. எனவே, அடுத்து வரும் இரண்டு மாடல்கள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கலாம்.

மாருதி எர்டிகா முழு விபரம்

 02. ஹோண்டா மொபிலியோ

02. ஹோண்டா மொபிலியோ

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா மொபிலியோ விற்பனையில் தொய்வு கண்டதற்கு, மாருதி எர்டிகாவைவிட விலை அதிகம் என்ற காரணமே முக்கியமானது. அதற்கடுத்து, டிசைன். ஆனால், சிறப்பான இடவசதி, வசதிகளில் குறைவில்லாத மாடல். மாருதி எர்டிகாவை ஒதுக்குபவர்களுக்கு அடுத்த சாய்ஸ் இதுவாக கூறலாம்.

ஹோண்டா மொபிலியோ முழு விபரம்

03. ரெனோ லாட்ஜி

03. ரெனோ லாட்ஜி

டொயோட்டா இன்னோவாவுக்கு போட்டியான இடவசதி, மாருதி எர்டிகாவின் டீசல் மாடலின் விலைக்கு போட்டியாக நிலைநிறுத்தப்பட்ட மாடல். மிகச்சிறந்த இடவசதி, நம்பகமான டீசல் எஞ்சின் கொண்டது. ஆனால், இதன் டிசைன் அனைவரையும் கவராது. அத்துடன், ரெனோ சர்வீஸ் மீது பலருக்கும் இன்னும் நம்பிக்கை வரவில்லை. ஆனால், டொயோட்டா இன்னோவா அளவுக்கு இடவசதியை எதிர்பார்த்து, அதைவிட குறைவான பட்ஜெட்டுடன் திட்டமிடுபவர்களுக்கு ரெனோ லாட்ஜிதான் பெஸ்ட்.

ரெனோ லாட்ஜி முழு விபரம்

 01. ஹோண்டா சிட்டி

01. ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி பிராண்டுக்கென்று ஓர் தனி மதிப்பும், அந்தஸ்தும் சமூகத்தில் இருக்கிறது. டிசைன், வசதிகள், மைலேஜ், தரமான கட்டுமானம் போன்றவை இந்த காரை தொடர்ந்து மிட்சைஸ் செடான் கார் செக்மென்ட்டில் முன்னிலை வகிக்க செய்துள்ளது.

ஹோண்டா சிட்டி முழு விபரம்

02. மாருதி சியாஸ்

02. மாருதி சியாஸ்

ஹைபிரிட் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட இதன் டீசல் மாடல் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெற செய்திருக்கிறது. இடவசதி, மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க் போன்றவை இந்த காருக்கென ஓர் சிறப்பான இடத்தை பெற செய்திருக்கிறது.

மாருதி சியாஸ் முழு விபரம்

03. ஹூண்டாய் வெர்னா

03. ஹூண்டாய் வெர்னா

இந்த செக்மென்ட்டில் சிறப்பான டிசைன் கொண்ட செடான் கார் மாடல் வெர்னாதான். மேம்படுத்தப்பட்ட மாடலும் இன்னும் அழகாகியிருக்கிறது. டிசைன், வசதிகள் என்று குறைவில்லாத மாடல். இந்த செக்மென்ட்டில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஃபியட் லீனியா, ஸ்கோடா ரேபிட் ஆகியவையும் சிறப்பான மாடல்கள்தான். ஆனால், அந்த மாடல்களின் சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விலை ஆகியவற்றை கருதி, இந்த பட்டியலை வழங்கியிருக்கிறோம்.

ஹூண்டாய் வெர்னா முழு விபரம்

01. மாருதி டிசையர்

01. மாருதி டிசையர்

இன்று காலை நாம் வெளியிட்ட டாப் 10 கார் செய்தித் தொகுப்பில் இரண்டு இடங்களை காம்பேக்ட் செடான் கார்கள் பெற்று இருக்கின்றன. அந்தளவு கார் நிறுவனங்களுக்கு விற்பனையில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருப்பதால், இப்போது 5 காம்பேக்ட் செடான்கள் இருக்கின்றன. அதில், குறைவான பராமரிப்பு கொண்ட மாடல் டிசையர்தான். மிகச்சிறப்பான சர்வீஸ், வசதிகள் என்று வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. டிசையர் வாங்கினால் தொல்லையிருக்காது என்ற எண்ணத்தில் என் போன்ற பல வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

மாருதி டிசையர் முழு விபரம்

 02. ஹோண்டா அமேஸ்

02. ஹோண்டா அமேஸ்

டிசைன், இடவசதி, சிறப்பான பூட் ரூம் போன்றவை இந்த காருக்கான மார்க்கெட்டை ஸ்திரப்படுத்தி இருக்கிறது. மாருதி டிசையருக்கு அடுத்து, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் காம்பேக்ட் செடான்.

ஹோண்டா அமேஸ் முழு விபரம்

03. ஃபோர்டு ஆஸ்பயர்

03. ஃபோர்டு ஆஸ்பயர்

சமீபத்திய வரவான ஃபோர்டு ஆஸ்பயர் டிசைன், இடவசதி, வசதிகள் மற்றும் எஞ்சின் ஆப்ஷன்களில் சிறப்பான மாடலாக இருக்கிறது. மாருதி டிசையரின் தோற்றம், ஹோண்டா அமேஸ் காரின் இன்டிரியர் டிசைனை விரும்பாதவர்களுக்கு இது மாற்றாக இருக்கிறது.

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ஃபோர்டு ஆஸ்பயர் முழு விபரம்

01. ஹூண்டாய் எலைட் ஐ20

01. ஹூண்டாய் எலைட் ஐ20

அட்டகாசமான டிசைன், வசதிகள் இந்த காரின் விற்பனையை புதிய உச்சங்களை தொடச் செய்திருக்கிறது. ரூ.8 லட்சம் பட்ஜெட்டில் ஓர் சிறப்பான டிசைன் மற்றும் வசதிகள் கொண்ட மாடலை விரும்புவோர் கண்டிப்பாக தேர்வு செய்து விடலாம்.

ஹூண்டாய் எலைட் ஐ20 முழு விபரம்

02. ஹோண்டா ஜாஸ்

02. ஹோண்டா ஜாஸ்

இந்த செக்மென்ட்டில் மேலும் ஓர் சிறப்பான சாய்ஸ் ஹோண்டா ஜாஸ் கார். டிசைன், வசதிகள், ஹோண்டாவின் பெயர் பெற்ற எஞ்சின் ஆப்ஷன்கள் ஆகியவை இந்த கார் பக்கம் வாடிக்கையாளர்களை இழுத்து வருகிறது.

ஹோண்டா ஜாஸ் முழு விபரம்

03. மாருதி பலேனோ [அக்.26ல் ரிலீஸ்]

03. மாருதி பலேனோ [அக்.26ல் ரிலீஸ்]

வரும் 16ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் மாருதி பலேனோ, இந்த செக்மென்ட்டில்தான் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. ஹூண்டாய் எலைட் ஐ20 மார்க்கெட்டை உடைக்க வேண்டும் என்ற நோக்கில் மாருதி அறிமுகம் செய்ய இருக்கும் மாடல். டிசைன், வசதிகள் என அனைத்திலும் மாருதி பிராண்டை ஒரு படி முன்னோக்கி எடுத்துச் செல்லும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதியின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. மாருதி எஸ் க்ராஸ் போன்று விலையில் சொதப்பாமல் இருந்தால் மட்டுமே, இந்த கார் வாடிக்கையாளர்களை கவரும். ஃபியட் புன்ட்டோ எவோ மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ கார்களும் சிறப்பான கார்களே. ஆனால், அவற்றின் சர்வீஸ் பில் அதிகம் என்பதுடன், விற்பனைக்கு பிந்தைய சேவையில் இன்னும் பல கட்டங்களை அந்த நிறுவனங்கள் தாண்ட வேண்டியிருக்கிறது.

01. மாருதி ஸ்விஃப்ட்

01. மாருதி ஸ்விஃப்ட்

டிசைன், வசதிகள், கையாளுமை, அதிக மைலேஜ், சரியான விலை கொண்ட ஓர் சிறப்பான ஹேட்ச்பேக் மாடல். குறைவான பராமரிப்பு செலவீனம் மற்றும் மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க்கையும் வைத்து தேர்வு செய்து விடலாம்.

மாருதி ஸ்விஃப்ட் முழு விபரம்

02. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்

02. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்

இந்த செக்மென்ட்டில் பிரிமியம் வசதிகளுடன் கூடிய சிறப்பான டிசைன் கொண்ட மாடல். பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கும் இந்த கார் விற்பனையிலும் சாதித்து வருகிறது. பட்ஜெட் விலையில் சற்று பிரிமியமான கார் மாடலை விரும்புவோர்க்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 முழு விபரம்

03. புதிய ஃபோர்டு ஃபிகோ

03. புதிய ஃபோர்டு ஃபிகோ

அடக்கமான, அழகான டிசைன் கொண்ட மாடல் என்ற பெயரெடுத்த முதல் தலைமுறை ஃபோர்டு ஃபிகோ காருக்கு மாற்றாக, புதிய தலைமுறை ஃபிகோ கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பெரிய அளவில் சொல்ல முடியாத டிசைன் என்றாலும், வசதிகள், பாதுகாப்பு, எஞ்சின் ஆப்ஷன்கள் என அனைத்திலும் ஓர் சிறப்பான பேக்கேஜ் கொண்ட மாடல்.

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

புதிய ஃபோர்டு ஃபிகோ முழு விபரம்

01. மாருதி வேகன் ஆர்

01. மாருதி வேகன் ஆர்

பட்ஜெட் விலையில் சிறப்பான வசதிகளும், இடவசதியும் கொண்ட மாடல்கள் இந்த பட்டியலில் காணலாம். அதிக ஹெட்ரூம், வசதிகள் கொண்ட மிகச்சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல் மாருதி வேகன் ஆர் கார். குறைவான பராமரிப்பு, அதிக மைலேஜ், எளிதான டிரைவிங் அம்சங்களை கொண்ட நகர்ப்புறத்திற்கு ஏற்ற குட்டி கார். அதிக உயரம் கொண்டிருப்பதால், நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு சுமாராகத்தான் இருக்கும்.

மாருதி வேகன் ஆர் முழு விபரம்

 02. ஹூண்டாய் ஐ10

02. ஹூண்டாய் ஐ10

இந்த பட்ஜெட்டில் பிரிமியமான மாடலாக வலம் வருகிறது. தொடர்ந்து விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. வடிவமைப்பு, வசதிகளில் நிறைவான கார். மறு விற்பனை மதிப்பும் அதிகம் கொண்டது.

ஹூண்டாய் ஐ10 முழு விபரம்

03. மாருதி செலிரியோ

03. மாருதி செலிரியோ

குறைவான விலை கொண்ட டீசல் எஞ்சின் ஆப்ஷன், பெட்ரோல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் என்று வாடிக்கையாளர்களை வசீகரிக்கம் ஒரு பக்கா பட்ஜெட் மாடல். மாருதியின் பக்கபலம் என வேறு என்ன வேண்டும் உங்களுக்கு என்று மார்தட்டுகிறது.

மாருதி செலிரியோ முழு விபரம்

01. ரெனோ க்விட்

01. ரெனோ க்விட்

வடிவமைப்பு, வசதிகளில் பல படிகள் முன்னே இருக்கிறது. விலையில் பின்னே இருப்பதால், வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. ஆனால், ரெனோவின் விற்பனைக்கு பிந்தைய சேவையை மேம்படுத்தும் பட்சத்தில், இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெறும்.

ரெனோ க்விட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ரெனோ க்விட் முழு விபரம்

உங்கள் சாய்ஸ்

உங்கள் சாய்ஸ்

கார் தேர்வு என்பது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் மாறுபடும். மேலும், அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்த பிறகு உங்கள் மனதுக்கும், குடும்பத்துக்கும், பயன்பாட்டுக்கும் சிறப்பான மாடலை தேர்ந்தெடுக்கவும்.

வாழ்த்துகள்!!

மஹிந்திரா மோஜோ டெஸ்ட் டிரைவ்

மஹிந்திரா மோஜோ டெஸ்ட் டிரைவ்

கார், பைக் விமர்சனங்கள் மற்றும் உடனடி செய்தி சுருக்கங்களை அறிந்து கொள்ள எங்களது சமூக வலைதள பக்கங்களில் தொடர்பில் இருங்கள். மேலும், புதிய மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்ய இருக்கிறோம். அதுபற்றிய சிறப்புத் தகவல்கள் மற்றும் படங்களையும் காண்பதற்கு எங்களது சமூக வலைதள பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் தொடர்பில் இருக்க...

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

Most Read Articles
English summary
Top Best Cars In Every Segment In India 2015
Story first published: Tuesday, October 6, 2015, 13:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X