ஆன்லைன் விற்பனையில் கலக்கும் புதிய கார் மாடல்கள்!

ஆன்லைன் மூலமாக நடைபெறும் புதிய கார் விற்பனையில், மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய கார் மாடல்கள் முன்னிலை வகிப்பது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சகலத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் கலாச்சாரம் ஓங்கி நிற்கிறது. அது கார் விற்பனை துறையையும் விட்டுவைக்கவில்லை. ஆன்லைன் மூலமாக கார் விற்பனை செய்யும் சேவையை பல முன்னணி ஆட்டோமொபைல் தளங்கள் வழங்கி வருகின்றன.

Maruti Swift

அந்த வகையில், ஆட்டோபோர்ட்டல்.காம் என்ற ஆட்டோமொபைல் தளமும் ஆன்லைன் மூலமாக புதிய கார் வாங்கும் வசதியை வழங்கி வருகிறது. இந்தநிலையில், அந்த தளத்தின் புதிய கார் விற்பனை தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளி விபர அறிக்கையில், பல முக்கியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அந்த இணையதளம் விற்பனை செய்த கார்களில் 45 சதவீதம் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் எனவும், 40 சதவீதம் ஹூண்டாய் ஐ10 கார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று, விற்பனையில் 10 சதவீதம் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.34 கோடி அளவுக்கு ஆன்லைன் மூலமாக புதிய கார்கள் விற்பனையாகிறது. ஆன்லைன் கார் விற்பனையில் நாங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து வருகிறோம்.

கடந்த ஆண்டு ஏப்ரல்- ஜூன் இடையிலான காலாண்டின் பரிவர்த்தனைகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் ஜனவரி- மார்ச் இடையிலான காலண்டு காலத்தில் எங்களது பரிவர்த்தனைகள் 10 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

ஒவ்வொரு காலாண்டிலும் இந்த வளர்ச்சி வெகுவாக அதிகரிக்கும் என்று நம்புகிறோம். பல நகரங்களிலும் எங்களது சேவையை விரிவுப்படுத்துவதற்காக, கார் டீலர்களுடன் ஒப்பந்தம் செய்யும் முயற்சிகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறோம். இதன்மூலம், எங்களது தளத்தின் புதிய கார் விற்பனை வெகுவாக உயரும் வாய்ப்புள்ளது.

பழைய காரை ஆன்லைன் மூலமாக வாங்குவதற்கும், விற்பதற்குமான வசதியையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த துறையிலும், வலுவான வர்த்தக வாய்ப்புகள் உள்ளது என்று அந்த தளம் வெளியிட்டிருக்கும் புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Swift, Hyundai i10 Grand and Hyundai Elite i20 are the dark horses in online sales this year.Top Selling Hatchback Cars in 2015, auto news, ஆட்டோ செய்திகள், கார் விற்பனை
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X