புதிய டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

By Saravana

இந்தியர்களுக்கு ஹைபிரிட் சுவையையூட்டி சிறிது வெற்றி கண்டிருக்கிறது டொயோட்டா கார் நிறுவனம். ஆம், கடந்த 2013ம் ஆண்டு, இரட்டை எரிபொருள் வகையில் இயங்கும், டொயோட்டா கேம்ரி காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது டொயோட்டா.

இந்த ஹைபிரிட் வகை மாடலுக்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, இதன் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய கேம்ரி மாடலை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹைபிரிட் மாடலுக்கு வரவேற்பு

ஹைபிரிட் மாடலுக்கு வரவேற்பு

பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் மாடலில் டொயோட்டா கேம்ரி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டில் 197 பெட்ரோல் கேம்ரி கார்கள் விற்பனையாகிய நிலையில், 523 கேம்ரி ஹைபிரிட் கார்கள் விற்பனையாகி அசத்தியுள்ளது. இதையடுத்தே, புதிய கேம்ரி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது டொயோட்டா.

 ஹைபிரிட் சிஸ்டம்

ஹைபிரிட் சிஸ்டம்

இந்த காரில் இருக்கும் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்து 202.11 எச்பி பவரையும், 483 என்எம் டார்க்கையும் வழங்கும். இதில், பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 213 என்எம் டார்க்கையும், எலக்ட்ரிக் மோட்டார் 270 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு இ- சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

 மைலேஜ்

மைலேஜ்

ஹைபிரிட் கார்களின் முக்கியச் சிறப்பு அதிக மைலேஜ் தருவதும், குறைந்த கார்பன் புகையை வெளிப்படுத்துவதேயாகும். அந்த வகையில், இந்த கார் லிட்டருக்கு 19.16 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சோதனை நிலைகளில் தரும் மைலேஜ் என்று டொயோட்டா தெரிவிக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

எல்இடி பகல்நேர விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், கேபினுக்குள் மூட் லைட்ஸ், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கியமானவை. 4 ஏர்பேக்குகள், ஸ்டெபிளிட்டி புரொகிராம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் போன்றவை முக்கிய பாதுகாப்பு வசதிகளாக கூறலாம்.

விலை

விலை

இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த புதிய டொயோட்டா கேம்ரி கார் ரூ.31.92 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
2015 Toyota Camry Hybrid has been launched at INR 31,92,000 ex-showroom, Delhi. Toyota Camry Hybrid has arrived in India as a Completely Built Unit(CBU) route. It will replace the current model that was on sale in India, it will be available in petrol and hybrid option.
Story first published: Saturday, May 2, 2015, 8:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X