இந்தியாவில் விற்பனைக்கு வரும் டொயோட்டா பயணிகள் வேன்!

இந்த ஆண்டு மத்தியில் டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஹைஏஸ் பயணிகள் வேன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் பஸ் மற்றும் விசேஷ வாகனங்களுக்கான கண்காட்சியில் இந்த புதிய வேன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மிக சவாலான விலையில் இந்த புதிய பயணிகள் வேன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குனர் என்.ராஜா தெரிவித்தார்.


போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

டாடா விங்கர், டெம்போ டிராவலர் போன்ற பயணிகள் வேன் மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். அதேவேளை, ஸ்டாக் மாடலில் அதிக சொகுசு வசதிகள் கொண்டதாக இதனை நிலைநிறுத்த டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

சிறப்பான கேபின் இடவசதி கொண்ட மாடல் என்பதோடு, தாழ்தளம் மற்றும் ஸ்லைடர் கதவுகள் மூலம், ஏறி இறங்குவது மிக எளிதாக இருக்கும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த புதிய பயணிகள் வேன் 10 பேர் அமர்வதற்கான இருக்கை வசதி கொண்டது.

 எஞ்சின்

எஞ்சின்

டொயோட்டா ஹைஏஸ் வேனில் 134 பிஎச்பி பவரையும், 300என்எம் டார்க்கையும் வழங்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் யூரோ- 4 மாசுக்கப்பாட்டு அம்சம் கொண்டது. இந்த மினி வேனில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மார்க்கெட்டில் 148 எச்பி பவரையும், 241 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

முன் வரிசை இருக்கையில் டியூவல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பனி விளக்குகள், ரிவர்ஸ் கேமரா, எஞ்சின் இம்மொபைலைசர் ஆகியவை முக்கிய பாதுகாப்பு வசதிகளாக கூறலாம்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், பவர் ஸ்லைடர் கதவுகள், ஏசி, ஃபேப்ரிக் இருக்கைகள் மற்றும் 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் போன்றவை உள்ளன.


Most Read Articles
English summary
Japanese vehicle manufacturer Toyota is present at the fourth Bus and Special vehicle exhibition in Greater Noida, India. They have now confirmed that they will launch the HiAce minivan by mid-2015.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X