இலவசமாக ஹைட்ரஜன் கார் தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ள டொயோட்டா தயார்

ஹைட்ரஜன் கார் தொழில்நுட்பத்திற்காக பெறப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை இதர கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் இலவசமாக பகிர்ந்துகொள்வதாக டொயோட்டா கார் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா மரபுசார் எரிபொருளுக்கு மாற்றான புதிய வகை எரிபொருள் கார்களை உருவாக்குவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஹைட்ரஜனில் இயங்கும் கார்களை உருவாக்குவதிலும் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

Toyota Fuel Cell

இந்த நிலையில், ஹைட்ரஜன் கார் தொழில்நுட்பத்திற்காக 5,680 காப்புரிமைகளை டொயோட்டா இதுவரை பெற்றிருக்கிறது. இதில், 3,350 தொழில்நுட்பங்கள் ப்யூவல் செல் சிஸ்டம் சாஃப்ட்வேருக்காக பெறப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் கார் வடிவமைப்பில் இந்த சாஃப்ட்வேர்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும், 1970 காப்புரிமைகள் ஃப்யூவல் செல் அமைப்பு பற்றியது. அதிக அழுத்தம் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் டேங்கிற்காக 290 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் சப்ளை மற்றும் உற்பத்திக்காக 70 காப்புரிமைகளை அந்த நிறுவனம் பெற்றஇருக்கிறது.

இந்த நிலையில், இந்த அதிமுக்கிய தொழில்நுட்பங்களை பிற கார் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் மின்னணு நுகர்வோர் கண்காட்சியில்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இதுதொடர்பாக, டொயோட்டா மோட்டார்ஸ் அமெரிக்கா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் பாப் கார்டர் கூறுகையில்," 2015 முதல் 2020ம் ஆண்டுகளுக்கு இடையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் தலைமுறை ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அவற்றை உருவாக்குவதில், வாகன தயாரிப்பாளர்கள், அரசுத் துறையினர், ஆய்வாளர்கள் மற்றும் உற்பத்தி பிரிவினர் என அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

வழமையான கார்ப்பரேட் விதிமுறை எல்லைகளை கடந்து, புதிய உத்வேகத்துடன் அடுத்த தலைமுறை போக்குவரத்து சாதனங்களுக்கான குறைந்த செலவீனம், திறன் மிக்க புதிய வகை எரிபொருள் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்.

தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம், சிறப்பான புதிய தொழில்நுட்பங்கள் விரைவாக உருவாகும். மேலும், ஹைட்ரஜன் வாகனங்கள் உருவாக்கத்தில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் நோக்கத்திலேயே இந்த தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனம் தனது தொழில்நுட்பங்களை இதர கார் நிறுவனங்களுக்கு இலவசமாக பகிர்ந்துகொள்வதாக அறிவித்தது நினைவுகூறத்தக்கது.

Most Read Articles
English summary
Now Toyota has decided to also share its patents in regards to hydrogen fuel cell technology.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X