டொயோட்டா நிறுவனத்தின் குட்டி ஸ்போர்ட்ஸ் கார்!

By Saravana

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா கார் நிறுவனம் ஓர் வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறது. ஆம், ஒரு புத்தம் ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் கார் மாடலை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இந்த மாத இறுதியில் துவங்க இருக்கும் டோக்கியோ மோட்டார் ஷோவில் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. டொயோட்டா எஸ்-எஃப்ஆர் என்ற பெயரிலான இந்த கான்செப்ட் நிலையிலான காரின் படங்கள், விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவம்

வடிவம்

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது. 3,990மிமீ நீளமும், 1,695மிமீ அகலமும், 1,320மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2,480மிமீ வீல் பேஸ் கொண்டது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த காரில் 4 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

முழுவதுமாக டிஜிட்டல் மீட்டர் கன்சோல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டமும் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

காரின் முன்புறத்தில் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இருக்கும். அதிகபட்சமாக 130 குதிரைசக்தி திறனை வெளிக்கொணரும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கிறது.

எடை

எடை

இந்த கார் 979 கிலோ எடை கொண்டதாக இருக்கும். எனவே, மிக எளிமையான அம்சங்களுடன் ஓட்டுவதற்கு உற்சாகத்தை அளிக்கும் விதத்திலான ஓர் குட்டி ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக வர்ணிக்கப்படுகிறது.

 இளைஞர்களுக்காக...

இளைஞர்களுக்காக...

இளைஞர்களை கவரும் விதத்தில் இந்த புதிய ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் கார் மாடலை வடிவமைத்து இருப்பதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை டோக்கியோ மோட்டார் ஷோவில் டொயோட்டா வெளியிடும்.

Most Read Articles
English summary
Toyota Reveals New Entry-Level Sports Car Concept.
Story first published: Thursday, October 8, 2015, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X