ஹிட்லர் முயற்சியில் தயாரான பீட்டில் காருக்கு மூடுவிழா நடத்த ஃபோக்ஸ்வேகன் திட்டம்!

உலகின் மிகப்பெரிய வாகன குழுமங்களில் ஒன்றான ஃபோக்ஸ்வேகன் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, நஷ்டத்தை தரும் கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறது.

அந்த பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பல தலைமுறைகளை கண்டுவிட்ட ஃபோக்ஸ்வேகன் பீட்டிலை தற்போது மார்க்கெட்டில் இருந்து விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பீட்டில் ரசிகர்களிடம் ஏமாற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஹிட்லரின் கனவு கார்

ஹிட்லரின் கனவு கார்

ஜெர்மனியை சேர்ந்த சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லரின் எண்ணத்தில் உருவானதுதான் பீட்டில் கார். சொகுசு கார்களை ஜெர்மனி நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வந்த நிலையில், மக்கள் எளிதாக வாங்கும் வகையிலான கார்களை உருவாக்க ஹிட்லர் விருப்பம் கொண்டார்.

உந்துதல்

உந்துதல்

அமெரிக்காவின் ஹென்றி ஃபோர்டின் குறைந்த விலை கார் தயாரிப்பு திட்டத்தை பார்த்து வியந்து போன ஹிட்லர், ஜெர்மனி நிறுவனங்களும் குறைந்த விலை காரை தயாரிக்க வேண்டும் என்பதில் ஹிட்லர் முனைப்பு கொண்டிருந்தார். மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி கார் நிறுவனங்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதற்கும் அதிக நிதி உதவிகளை வாரி வழங்கினார் ஹிட்லர்.

வடிவமைத்தவர் போர்ஷே

வடிவமைத்தவர் போர்ஷே

ஹிட்லரின் கனவு கார் திட்டத்தை ஜெர்மனியின் பிரபல ஆட்டோமொபைல் எஞ்சினியரும், போர்ஷே கார் நிறுவனத்தை நிறுவியவருமான போர்ஷேதான் நனவாக்கினார். சுமார் 4 ஆண்டுகால உழைப்பில் உருவானதுதான் பீட்டில்.

 ஹிட்லர் பிறந்தநாள் பரிசு

ஹிட்லர் பிறந்தநாள் பரிசு

1939ம் ஆண்டு ஏப்ரல் 20ந் தேதி ஹிட்லர் பிறந்தநாள். அன்று டைப் 1 பீட்டில் காரின் கேப்ரியோலே மாடல் ஹிட்லருக்கு வழங்கப்பட்டது.

வண்டு

வண்டு

இதன் தோற்றம் வண்டு போல இருந்ததால் ஃபோக்ஸ்வேகன் டைப் 1 பீட்டில் காரை ஃபோக்ஸ்வேகன் Bug என்றே பட்டப் பெயரிட்டு அழைத்தனர்.

மக்கள் கார்

மக்கள் கார்

ஃபோக்ஸ்வேகன் என்பது ஜெர்மானிய மொழியில் மக்கள் கார் என்று அர்த்தம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த பிராண்டில் வெளிவந்த முதல் மாடல் இதுதான்.

 4 சீட்டர்

4 சீட்டர்

பட்ஜெட் விலையில் 4 பேர் செல்லக்கூடிய 2 கதவுகள் கொண்ட காராக இருக்க வேண்டும் என்பது ஹிட்லரின் எண்ணம். அதன்படியே இந்த கார் வடிவமைக்கப்பட்டது.

பல தலைமுறை

பல தலைமுறை

ஒரே பிளாட்ஃபார்மில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட கார் மாடல் இதுதான். கடந்த 1938 முதல் 2003ம் ஆண்டு வரை 21 மில்லியன் பீட்டில் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

வழித்தோன்றல்கள்

வழித்தோன்றல்கள்

பல தலைமுறை கண்டுவிட்ட பீட்டில் கார் பல வாரிசுகளையும் உருவாக்க தவறவில்லை. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய கார் மாடல்கள் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப், ஜெட்டா மற்றும் புதிய பீட்டில் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
German automobile giant, Volkswagen is not doing particularly well across the globe. They were one of the first four-wheeler manufacturers to go globally. Volkswagen's most popular vehicle over the years has to be their Beetle hatchback.
Story first published: Friday, March 13, 2015, 6:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X