2018ல் ஃபோக்ஸ்வேகன் பட்ஜெட் பிராண்டு அறிமுகம்!

By Saravana

உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமங்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன். இந்த நிறுவனத்தின் கீழ் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கார் தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய நிறுவனம் என்ற பெருமையை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது ஃபோக்ஸ்வேகன்.

Volkswagen car

இதற்காக, வளரும் நாடுகளுக்காக புதிய பட்ஜெட் பிராண்டை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய பட்ஜெட் பிராண்டில் புதிய ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

முதலாவதாக, சீனாவில் இந்த புதிய பட்ஜெட் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அங்கேயே இந்த கார்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய கார் மாடல்களை 2018ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டிருக்கிறது.

சீனாவை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் பட்ஜெட் பிராண்டு இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Most Read Articles
English summary
German manufacturer Volkswagen is planning on introducing a budget friendly brand in newly emerging markets. Under this new brand they will introduce a compact SUV, compact sedan and compact hatchback.
Story first published: Wednesday, July 1, 2015, 9:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X