இந்தியாவில் கார் அசெம்பிள்... எச்எம், ஜிஎம், மஹிந்திராவுடன் வால்வோ பேச்சு!

By Saravana

இந்தியாவில் கார் அசெம்பிள் செய்வதற்காக மஹிந்திரா, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ் ஆலைகளை பயன்படுத்துவது குறித்து வால்வோ கார் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சுவீடனை சேர்ந்த வால்வோ கார் நிறுவனம் இந்தியாவில் சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி ரக மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், வேகமாக வளர்ந்து வரும் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்து விடும் முயற்சிகளை வால்வோ கார் நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.

Volvo Car

போட்டியாளர்களான ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவிலேயே ஆலைகளை திறந்து கார்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகின்றன. இதனால், சவாலான விலையில் அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்கின்றன.

இதேபோன்று, வால்வோ நிறுவனமும் இந்தியாவிலேயே கார்களை அசெம்பிள் செய்து விற்க முடிவு செய்துள்ளது. உடனடியாக ஆலையை அமைக்க முடியாது என்பதை கருதி, மஹிந்திரா, ஜெனரல் மோட்டார்ஸ் அல்லது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனங்களின் ஆலைகளில் ஒன்றை பயன்படுத்தி கார்களை அசெம்பிள் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக, அந்த நிறுவனங்களுடன் வால்வோ கார் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது இன்னமும் ஆரம்ப கட்ட முயற்சியில் இருப்பதாக அந்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Swedish luxury carmaker Volvo is talks with Mahindra & Mahindra, Hindustan Motors and General Motors India to explore the feasibility of utilising the facilities of one of these auto manufacturers to locally assemble its vehicles in India.
Story first published: Monday, February 23, 2015, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X