ரூ.24.75 லட்சத்தில் புதிய வால்வோ சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!

By Saravana

வால்வோ நிறுவனத்தின் குறைவான விலை கொண்ட வி40 சொகுசு கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சொகுசு கார்களில் இது ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது. ஆடி, பென்ஸ் போன்ற நிறுவனங்களின் குறைவான விலை சொகுசு கார் மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இறக்குமதி மாடல்

இறக்குமதி மாடல்

இந்தியாவில் வால்வோ வி40 கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இருப்பினும், போட்டி மாடல்களைவிட பல நவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. கைனெட்டிக் மற்றும் ஆர் - டிசைன் என்ற இரு மாடல்களில் கிடைக்கும்.

உருவ ஒற்றுமை

உருவ ஒற்றுமை

கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட வால்வோ வி40 க்ராஸ் கன்ட்ரி காரின் சாதாரண மாடல்தான் இந்த வி40 ஹேட்ச்பேக். எனவே, இரண்டு கார்களுக்கும் தோற்றத்தில் அதிக வித்தியாசம் இருக்காது. வி 40 க்ராஸ் கன்ட்ரி கார் கூடுதல் ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த மாடல். இது அதன் சாதாரண வகை மாடல், அவ்வளவே.

எஞ்சின்

எஞ்சின்

வால்வோ வி40 க்ராஸ் கன்ட்ரி மாடலில் இருக்கும் அதே 2.0 லிட்டர் டி3 டீசல் எஞ்சின்தான் இந்த வி40 மாடலிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 152 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. தற்போது டீசல் மாடலில் மட்டுமே வந்துள்ளது. பின்னர், பெட்ரோல் மாடலையும் அறிமுகப்படுத்த வால்வோவிடம் திட்டம் இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

வால்வோ வி40 சொகுசு கார் லிட்டருக்கு 16.8 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனத்தால் தெரிவிக்கப்படுகிறது.

 முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

கைனெட்டிக் பேஸ் வேரியண்ட்டில் டிஎஃப்டி திரை, லெதர் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை முக்கிய வசதிகளாக இருக்கின்றன. ஆர்- டிசைன் வேரியண்ட்டில் கூடுதலாக பார்க் அசிஸ்ட் பைலட், பனரோமிக் சன்ரூஃப், ரெயின் சென்சார், கீ லெஸ் டிரைவ் மற்றும் ஆர்- டிசைன் பேக்கேஜ் கூடுதலாக இருக்கும்.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

  • டைனமிக் ஸ்டெபிளிட்டி மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல்
  • டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்
  • எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட்
  • ஆக்டிவ் பென்டிங் லைட்ஸ்
  • யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சந்திர அந்தஸ்து
  • 8 ஏர்பேக்குகள்
  • பாதசாரிக்கான ஏர்பேக்
  • விலை விபரம்

    விலை விபரம்

    இறக்குமதி மாடலாக இருந்தாலும், இதே விலையிலுள்ள சொகுசு கார்களைவிட பன்மடங்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. கைனெட்டிக் வேரியண்ட் ரூ.24.75 லட்சத்திலும், ஆர் - டிசைன் பேக்கேஜ் மாடல் ரூ.27.7 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles
English summary
Volvo India is showcasing tremendous faith in the domestic market and is launching one product after the other. Now on 17th June, 2015 the Swedish manufacturer has launched its premium hatchback V40 in India.
Story first published: Wednesday, June 17, 2015, 14:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X