கார் டீலரானார் உலகின் பெரும் பணக்காரர் வாரன் பஃபெட்!

By Saravana

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களிலும் ஒருவரும், முதலீட்டாளருமான வாரன் பஃபெட் புதிய கார் விற்பனை தொழிலில் இறங்கியுள்ளார். அமெரிக்காவின் பிரபலமான வான் டுயில் கார் டீலர்ஷிப் குழுமத்தை அவர் கையகப்படுத்தியிருக்கிறார்.

வான் துல் குழுமத்திற்கு அமெரிக்கா முழுவதும் கார் ஷோரூம்கள் இருக்கின்றன. ஆட்டோமொபைல் துறையில் தற்போது அதிக அளவில் முதலீடு செய்ய துவங்கியிருக்கிறார் வாரன் பஃபெட். அதற்கான காரணங்கள் மற்றும் இதர தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


வான் டுயில் குழுமம்

வான் டுயில் குழுமம்

வான் டுயில் குழுமம் தனது நேரடி கட்டுப்பாட்டில் அமெரிக்காவின் 10 மாநகரங்களில் 81 ஷோரூம்களையும், நூற்றுக்கணக்கான அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களையும் வைத்திருக்கிறது.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

வான் டுயில் குழுமம் பெர்க்ஷையர் ஹாத்வே ஆட்டோமோட்டிவ் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. வாரன் பஃபெட் கைவசம் இந்த குழுமம் வந்தாலும், நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹாத்வே ஆட்டோமோட்டிவ் சிஇஓ..,

ஹாத்வே ஆட்டோமோட்டிவ் சிஇஓ..,

வான் டுயில் குழுமத்தின் தலைவராக பணியாற்றஇ வந்த ஜெஃப்ரி ஆர் ராக்கோர் தற்போது புதிய ஹாத்வேக ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆர்வம் ஏன்

ஆர்வம் ஏன்

சீனாவின் பிஒய்டி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனத்தில் 10 சதவீதம் அளவுக்கு வாரன் பஃபெட் முதலீடு செய்திருக்கிறார். இந்த நிலையில், பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்த புதிய டீலர்ஷிப்புகள் மூலம் அமெரிக்காவில் விற்பனை செய்யும் திட்டமும் வாரன் பஃபெட்டிடம் இருக்கிறதாம்.

கணிப்பு தவறியதில்லை...

கணிப்பு தவறியதில்லை...

வாரன் பஃபெட் கணிப்புகள் எப்போதுமே தவறியதில்லை. அந்த வகையில், பொருளாதார மந்த நிலை மறைந்து தற்போது ஆட்டோமொபைல் துறை வெகுவேகமாக வளர்ச்சி கண்டு வருவதன் காரணமாகவே வாரன் பஃபெட் ஆட்டோமொபைல் துறையின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

Most Read Articles
English summary

 Billionaire Warren Buffett has purchased Van Tuyl Group, the largest closely held U.S. car dealership group.
Story first published: Thursday, March 12, 2015, 14:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X