வேலையை காட்டிய சீன நிறுவனம்... டெஸ்லா காரின் காப்பிகேட் மாடல் அறிமுகம்!

By Saravana

பிரபல கார் நிறுவனங்களின் விற்பனையில் ஓஹோவென இருக்கும் கார் மாடல்களை அப்படியே காப்பியடித்து, புதிய பெயரில் வெளியிடுவது சீனாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு கைவந்த கலை.

சில நிறுவனங்கள் உரிமத்தை பெற்று கார்களை தயாரித்தாலும், பல நிறுவனங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பிரபல கார் மாடலை காப்பியடித்து தனது பெயரில் வெளியிடும். மேலும், மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படுவதால், அதற்கு வரவேற்பும் இருக்கிறது.

இந்த லிஸ்ட்டில் கடைசியாக மாட்டிக் கொண்டிருக்கும் மாடல் அமெரிக்காவின் பிரபலமான டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார் மாடல். இதேபோன்ற தோற்றத்தில் அங்கு ஒரு எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

டெஸ்லா திட்டம்

டெஸ்லா திட்டம்

சீன மார்க்கெட்டில் களமிறங்குவதற்கு டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், சீனாவில் எலக்ட்ரிக் சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள், வரி வரி விதிப்பு, சாஃப்ட்வேர் விதிகளில் இருக்கும் கெடுபிடிகள் போன்றவற்றால் அங்கு களமிறங்கும் திட்டத்தை டெஸ்லா தள்ளிப்போட்டது. இதுவே, இப்போது சீன நிறுவனம் ஒன்றுக்கு சாதகமாகிவிட்டது.

காப்பிகேட் மாடல்

காப்பிகேட் மாடல்

யூக்சியா எக்ஸ் என்ற பெயரில் டெஸ்லா மாடல் எஸ் காரின் அடிப்படையிலான ஒரு மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான மாற்றங்களை தவிர்த்து, பொதுவான தோற்றத்தில் டெஸ்லா மாடல் எஸ் காரை யூக்சியா எக்ஸ் பிரதிபலிக்கிறது.

மஸராட்டி ஹெட்லைட்

மஸராட்டி ஹெட்லைட்

டெஸ்லா மாடல் எஸ் காரின் பொதுவான தோற்றத்தை கொண்டிருப்பதோடு, மஸராட்டி காரின் ஹெட்லைட் டிசைனை பயன்படுத்தியுள்ளனர். ஆக, யாரை பற்றியும் கவலை கொள்ளாமல் காப்பியடித்து டிசைன் செய்துள்ளனர்.

இன்டிரியர்

இன்டிரியர்

வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல, இன்டிரியர் அமைப்பும் அப்படியே டெஸ்லா மாடல் எஸ் காரை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது. டிசைனில் மட்டும்தான் காப்பியடிக்க முடிந்தது. ஆனால், தொழில்நுட்பத்தில் என்ன ஆனது என்று பாருங்கள்.

செயல்திறன்

செயல்திறன்

டெஸ்லா மாடல் எஸ் காரின் பேஸ் மாடல் அதிகபட்சமாக 315 எச்பி பவரை அளிக்க வல்லதோடு, 0 - 96 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளில் எட்டிவிடும். ஆனால், யூக்சியா எக்ஸ் கார் 0- 100 கிமீ வேகத்தை 5.6 வினாடிகளில் தாண்டிவிடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சிறிய வித்தியாசம்தான்!

ரேஞ்ச்

ரேஞ்ச்

டெஸ்லா மாடல் எஸ் கார் அதிகபட்சமாக 434 கிமீ வரை செல்லும். அதேவேளை, யூக்சியா எக்ஸ் கார் அதிகபட்சமாக 458 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விலை

விலை

சீனாவில் யூக்சியா எக்ஸ் காரின் பேஸ் மாடல் 47,000 டாலர் விலையிலும், டாப் என்ட் மாடல் 63,000 டாலர் விலையிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், இந் காருக்கு 15,000 டாலர் வரை சீன அரசின் மானிய சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும், 2017 முதல் டெலிவிரி துவங்கும் என்றும் நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
The Youxia X is an offbeat Chinese car that looks a lot like a Tesla Model S.
Story first published: Wednesday, July 29, 2015, 11:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X