விரைவில் இந்தியா வரும் புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள் ஆன்லைனில் கசிந்தன!

Written By:

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார்தான் வாடிக்கையாளர்களின் நம்பர்-1 சாய்ஸ். ஆனால், மாருதி சியாஸ் காரால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், புதிய ஹூண்டாய் வெர்னா காரும் இந்தியா வர இருப்பதால், ஹோண்டா சிட்டி காருக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும். இதனை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த புதிய ஹோண்டா சிட்டி கார் மாடல் ஒரு வாரத்தில் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, சில நாட்களுக்கு முன் இந்த காரின் டீசரும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தாய்லாந்து நாட்டு டீலர் ஒன்றில் நிறுத்தப்பட்டு இருந்த புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்களை அந்நாட்டு ஆட்டோமொபைல் துறை ஊடகம் ஒன்று வெளியிட்டு இருக்கிறது.

இந்த படங்களில் காரின் முன்புறம், பின்புறத்தில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை தெளிவாக காண முடிகிறது. புதிய ஹோண்டா சிட்டி காரின் முன்புற டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஹோண்டா சிட்டி கார் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் பகல்நேர விளக்குகளுடன் வருவது தெரிகிறது.

ஸ்பை படத்தில் பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டரின் டிசைன் மிகவும் சிறப்பாகவும், கவர்ச்சியாகவும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை காண முடிகிறது. பம்பர் டிசைனும் மறுவடிவமைப்பு பெற்று இருக்கிறது. வழக்கம்போல் கூரையில் டால்பின் வால் போன்ற ஆன்டென்னா பொருத்தப்பட்டு இருக்கிறது.

பூட் ரூம் மூடியில் ஸ்டாப் லைட்டும் பொருத்தப்பட்டு இருக்கிறது. 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல்களும் இடம்பெற்று இருக்கிறது. ஹோண்டா சிவிக் கார் போன்றே, புதிதய ஹோண்டா சிட்டி கார் காஸ்மிக் புளூ என்ற விசேஷ கலரில் வருவதும் தெரிய வந்துள்ளது.

உட்புறத்தில் கருப்பு வண்ண டேஷ்போர்டு அமைப்பும், அதில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இடம்பெற்று இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சாதனம் சப்போர்ட் செய்யும்.

புதிய ஹோண்டா சிட்டி காரில் தற்போது பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்களே தொடர்ந்து பயன்படுத்தப்படும். பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வரும். டீசல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வரும்.

அடுத்த மாதம் 12ந் தேதி புதிய ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Via - funtasticko

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Friday, December 30, 2016, 12:49 [IST]
English summary
The 2017 Honda City facelift was teased by Honda Thailand a few days ago. Now leaked images have surfaced on the internet revealing the new front and rear fascias.
Please Wait while comments are loading...

Latest Photos