இந்த புதிய பட்ஜெட் கார்களுக்கான உங்கள் காத்திருப்பு வீண் போகாது!

By Saravana

இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கார் மார்க்கெட் மிக முக்கியமானது. ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி என அனைத்து ரகங்களிலும் குறைவான விலை கொண்ட பல வகை கார் மாடல்கள் இடம்பெற்றிருக்கும் இந்த மார்க்கெட் எப்போதுமே பெரிய அளவு வாடிக்கையாளர் வட்டத்தை கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த செக்மென்ட்டில் அடுத்த சில மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புத்தம் புதிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களில் சில வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை வெகுவாகவே கூட்டியிருக்கிறது. அந்த வகையில், 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வர இருக்கும் புத்தம் புதிய கார் மாடல்களில் டாப் 5 மாடல்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம். இந்த கார்களுக்காக நீங்கள் காத்திருந்தாலும், அந்த காத்திருப்பு வீண் போகாது. அந்த அருமையான கார்களின் சுருக்கமான விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. டாடா நெக்ஸான்

01. டாடா நெக்ஸான்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய மினி எஸ்யூவி மாடல். 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களைவிட டிசைனில் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதோடு, புதுமையாகவும் இருக்கும். அதாவது, சாலையில் செல்லும்போது நிச்சயம் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும். அத்துடன், இன்டீரியர் கவர்ச்சியாக இருக்கும் என்பதோடு, டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல நவீன வசதிகளை பெற்றிருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை

எதிர்பார்க்கப்படும் விலை

இந்த காரில் 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல ஆற்றல் வாய்ந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ் மாடல் ரூ.6 லட்சத்தையொட்டி வரும் என எதிர்பார்க்கப்படுவதால், நிச்சயம் இந்த கார் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என தெரிகிறது.

02. டட்சன் ரெடிகோ

02. டட்சன் ரெடிகோ

வரும் 1ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் டட்சன் ரெடிகோ கார் சிறிய ரக கார் மார்க்கெட்டில் நிச்சயம் முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டிசைனில் விலை குறைவான காரை எதிர்பார்ப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த சாய்ஸாக அமையும். அத்துடன், போட்டியாளர்களைவிட சிறப்பான இடவசதி இந்த காரை முன்னிறுத்தும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரெனோ க்விட் காரில் இடம்பெற்றிருக்கும் 53 பிஎச்பி பவரை வழங்கவல்ல 3 சிலிண்டர்கள் கொண்ட 800சிசி பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் இடம்பெற்றுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என்பதும், வாடிக்கையாளர்களை வளைக்கும் விஷயம். ரூ.2.5 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

03. மாருதி இக்னிஸ்

03. மாருதி இக்னிஸ்

மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி இந்த காரை ஜப்பானில் அறிமுகம் செய்துவிட்டது. அடுத்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தியர்கள் அதிகம் விரும்பும் க்ராஸ்ஓவர் ஸ்டைலில் வரும் இந்த காரில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும். ஆப்பிள் கார்பிளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை

எதிர்பார்க்கப்படும் விலை

ஸ்விஃப்ட் காரில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷனுடன் வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கும் என தெரிகிறது. ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

04. டாடா கைட் 5

04. டாடா கைட் 5

டாடா டியாகா காரின் செடான் வெர்ஷன்தான் இந்த டாடா கைட் 5 கார். அதாவது, டாடா ஸெஸ்ட் காருக்கு அடுத்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து வரும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மற்றொரு காம்பேக்ட் செடான் கார். மாருதி டிசையர் மாடலுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட இருக்கும் டாடா கைட் போட்டியாளர்களைவிட டிசைனில் மிகச்சிறப்பாக இருக்கும். குறிப்பாக, கூரையுடன் அழகாக இணைக்கப்பட்ட பூட் ரூம் இந்த காரின் டிசைன் ஹைலைட்டாக பேசப்படும். அதுமட்டுமல்ல, 350 லிட்டர் முதல் 400 லிட்டர் பூட்ரூம் கொண்டதாக இருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை

எதிர்பார்க்கப்படும் விலை

இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த இரு மாடல்களுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். ரூ. 4.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் எதிர்பார்க்கலாம்.

05. ஃபோக்ஸ்வேகன் அமியோ

05. ஃபோக்ஸ்வேகன் அமியோ

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவிற்காக உருவாக்கியிருக்கும் காம்பேக்ட் செடான் ரக கார் மாடல் அமியோ. ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் பூட் ரூம் சேர்க்கப்பட்ட இந்த கார், அந்த நிறுவனத்தின் கட்டமைப்புக்கு சான்றாக வரும் புதிய மாடல். தரமான பாகங்கள், அதிக தொழில்நுட்ப வசதிகள் வாடிக்கையாளர்களை கவரும்.

எதிர்பார்க்கப்படும் விலை

எதிர்பார்க்கப்படும் விலை

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டீசல் எஞ்சின் மாடல் பின்னர் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த காருக்கான பிரத்யேக இணையதளமும் செயல்பட்டு வருவதுடன், முன்பதிவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் தனிக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை நிச்சயம் உருவாக்கும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

Most Read Articles
English summary
5 Sub-4 metre compact cars worth waiting for.
Story first published: Monday, May 23, 2016, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X