மேற்குவங்க டாடா நானோ கார் ஆலையின் இன்றைய நிலையை பார்த்தீங்களா?

By Saravana Rajan

மேற்குவங்கத்தில் அமைக்கப்பட்ட நானோ கார் ஆலையின் இன்றைய பரிதாபகரமான நிலையை பிரபல பத்திரிக்கை ஒன்று படம் பிடித்து வெளியிட்டிருக்கிறது.

மேலும், எந்த மக்களின் நலன் காக்க அந்த ஆலை இழுத்து மூடப்பட்டதோ, அதற்கான தீர்வு இதுவரை கிடைக்காமல் இருப்பதுதான் பலரையும் வேதனையில் ஆழ்த்தும் விஷயம்.

சின்ன ப்ளாஷ்பேக்

சின்ன ப்ளாஷ்பேக்

மேற்குவங்க மாநிலம், சிங்கூரில் உலகின் மிக குறைவான விலை கொண்ட டாடா நானோ காருக்காக புதிய கார் ஆலை அமைக்க அம்மாநில அரசுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்தது.

நிலம் கையகப்படுத்துதல் சட்டம்

நிலம் கையகப்படுத்துதல் சட்டம்

1894ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் அடிப்படையில், அப்போது ஆட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, சிங்கூரில் இருந்த 997 ஏக்கர் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தியது. இதற்கு விவசாயிகளின் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

திரிணாமுல் போராட்டம்

திரிணாமுல் போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் குதித்தது. இதனால், அங்கு அமைக்கப்பட்ட நானோ கார் ஆலையை தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, 2008ம் ஆண்டு செப்டம்பர் 28ந் தேதி சிங்கூரில் அமைக்கப்பட்ட டாடா நானோ கார் ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதாக ரத்தன் டாடா அறிவித்தார்.

அரசியல் லாபம்

அரசியல் லாபம்

இந்த பிரச்னையை வைத்தே மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடித்தார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. இந்தநிலையில், அங்கு அரைகுறையாக அமைக்கப்பட்ட ஆலையின் நிலையும், விவசாயிகளின் நிலையும் இன்றைய நிலையில் மிக மோசமாக இருக்கிறது.

கோர்ட்டில் பிரச்னை

கோர்ட்டில் பிரச்னை

ஆலை அமைக்கப்பட்ட இடத்தை தவிர்த்து, மீதமுள்ள விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்கப்படும் என்று முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி கூறினார். ஆனால், நீதிமன்றத்தில் இந்த பிரச்னை இருப்பதால், இன்று வரை விவசாயிகளுக்கு நிலம் திரும்ப வழங்கப்படவில்லை. நிலத்தை கொடுத்துவிட்டு, நிலமும் கிடைக்காமல், இழப்பீடும் கிடைக்காததால், அவர்களது நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது.

மற்றொரு அவலம்

மற்றொரு அவலம்

ஆலை அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஆலையில் வேலை வழங்கப்படும் என்று உறுதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆலை திட்டம் முடங்கியதால், ஆலைக்கு விவசாய நிலங்களை கொடுத்தவர்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்தில் உள்ளனர்.

கோரிக்கைகள்

கோரிக்கைகள்

இந்தநிலையில், ஆடு, மாடுகளின் ஓய்வு இல்லமாக மாறிவிட்ட அந்த ஆலை, பராமரிப்பு இல்லாமல் மிக மோசமான நிலையில் உள்ளது. அதனை மீட்டெடுத்து, வேறு ஆலைக்கு பயன்படுத்தினால், நிலம் கொடுத்தவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் என்பதுடன், ஆலையின் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் என்று அப்பகுதியை சேர்ந்த அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

 மூன்றாம் நபர் தலையீடு

மூன்றாம் நபர் தலையீடு

இழப்பீடு மற்றும் ஆலையை நடத்துவதற்கான முயற்சிகளை மூன்றாம் நபர்கள் தலையிட்டு தீர்க்க வேண்டும் என்றும் போராட்டத்தை நடத்திய தலைவர்களும் கோரிக்கை வைக்கின்றனர். மாநில அரசுக்கும், தொழில் அதிபர்களுக்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் சிறந்த தீர்வு காண முடியும் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Article Source: THE QUINT

Image Credit: Ritam Sengupta

Source: The Quint

Most Read Articles
English summary
Abandoned Tata Nano Factory In West Bengal- Photos.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X