உலகின் மிக வேகமான எலக்ட்ரிக் சூப்பர் கார் ஆர்க்ஃபாக்ஸ் 7 அறிமுகம்

By Ravichandran

உலகின் மிக வேகமான எலக்ட்ரிக் சூப்பர் கார் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ஆர்க்ஃபாக்ஸ் 7 (Arcfox 7) என பெயரிடபட்டுள்ள இந்த எலக்ட்ரிக் சூப்பர் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஆர்க்ஃபாக்ஸ் 7...

ஆர்க்ஃபாக்ஸ் 7...

பெய்ஜிங் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் (Beijing Automotive Industry Corporation (BAIC)) என்ற நிறுவனம் சீன சந்தைகளுக்காக ஹூண்டாய் மற்றும் மெர்சிடிஸ் பிராண்ட் கொண்ட கார்களை தயாரித்து வழங்குகிறது.

இந்த பெய்ஜிங் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் தான், ஆர்க்ஃபாக்ஸ் 7 என பெயர் சூட்டபட்டுள்ள இந்த எலக்ட்ரிக் சூப்பர் காரை தயாரித்து வழங்குகிறது.

சிஸ்ஸர் டோர்;

சிஸ்ஸர் டோர்;

ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் கார், சிஸ்ஸர் டோர் என்று அழைக்கபடும் கத்தரிக் கோல் அமைப்புடைய கதவுகள் கொண்டுள்ளது.

இதனால், பிரத்யேகமாக காட்சி அளிக்கின்ற தோற்றம் கொண்டுள்ளது. மேலும், இது உலகின் மிக வேகமான சூப்பர்கார்களுடனும் போட்டி போடும் திறன் கொண்டுள்ளது.

செயல் திறன்;

செயல் திறன்;

ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் காரில் 603 பிஹெச்பி எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தபடுகிறது.

ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான தூரத்தை மணிக்கு 3 நொடிகளில் எட்டிவிடுன் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் கார், அதிகபட்சமாக மணிக்கு 257 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

டிரைவிங் மோட்கள்;

டிரைவிங் மோட்கள்;

ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் கார், 3 விதமான டிரைவிங் மோட்கள் கொண்டுள்ளது. இது, எகானமி, கம்ஃபர்ட் மற்றும் ரேஸ் ஆகிய மோட்கள் ஆகும்.

ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் காரை இயக்குபவர்கள் தேர்வு செய்யும் மோட்களை பொருத்து, இதன் உயரத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது.

பிரேக்;

பிரேக்;

ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் கார், கார்பன் செராமிக் டிஸ்க் பிரேக்குகள் கொண்டுள்ளது.

ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் காரின் முன்பக்கத்தில் 6 பிஸ்டன் கேளிப்பர்களும், பின்பக்கத்தில் 4 பிஸ்டன் கேளிப்பர்களும் கொண்ட கார்பன் செராமிக் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தபட்டுள்ளது.

பேட்டரி பேக்;

பேட்டரி பேக்;

ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் காரில், 6.6kWh பேட்டரி பேக் பொருத்தபட்டுள்ளது.

சார்ஜிங் திறன்;

சார்ஜிங் திறன்;

ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் காரை ஒரு முறை சார்ஜிங் செய்தால், 300 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.

எடை;

எடை;

ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் கார், கார்பன் ஃபைபர் பாடி கொண்டுள்ளது. இதன் எடை வெரும் 1755 கிலோகிராம் என தெரிவிக்கபட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் படி, இந்த ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் கார், ஆஸ்டன் மார்ட்டின் வல்கேன் போன்றே காட்சி அளிக்கிறது.

இது எல்இடி ஹெட்லேப்கள் மற்றும் சிஸ்ஸர் டோர்கள் கொண்டுள்ளது.

சிறப்பம்சம்;

சிறப்பம்சம்;

ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் கார், டிஜிட்டல் டிஸ்பிளே கொண்டுள்ளது.

மேலும், இந்த சூப்பர்காரின் மோட்டாரை துவக்க கைரேகை ஸ்கேனர் (Fingerprint Scanner) பயன்படுத்தபடுகிறது.

வகைபடுத்தல்;

வகைபடுத்தல்;

ஆர்க்ஃபாக்ஸ் 7 எலக்ட்ரிக் சூப்பர் கார், ஆர்க்ஃபாக்ஸ் ரேஞ்ச்சில் டாப் எண்ட் வேரியண்ட்டாக வகைபடுத்தபட்டுள்ளது.

இதன் ஆரம்ப் நிலை வேரியண்ட்டான ஆர்க்ஃபாக்ஸ் 1 என்ற திறந்த மேற்கூரை வகையிலான சிறிய எஸ்யூவியும், பெய்ஜிங் மோட்டார் ஷோவில் அறிமுகம் காட்சிபடுத்தபட்டது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி 800 காரும், கொஞ்சம் ஆர்வமும் இருந்தால் போதும்...!!

காஸ்ட்லி கார் உரிமையாளர்களுக்கான டேட்டிங் வெப்சைட்!

சுரங்க வாகனங்களும், பிரம்மிக்க வைக்கும் சுவாரஸ்யங்களும்... !

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
World's Fastest Electric Super Car named as Arcfox 7 is being produced by Beijing Automotive Industry Corporation (BAIC). BAIC known for making Hyundai and Mercedes-enz branded cars for Chinese market has introduced this Super car in Beijing in China. Its top speed is 257km/h. To know more about Arcfox 7 - World's Fastest Electric Super Car, check here...
Story first published: Thursday, April 28, 2016, 11:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X