இந்தியா வந்த அஸ்டன் மார்ட்டின் டிபி11 கார்: சென்னைக்கும் வருகிறது!

Written By:

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் லேட்டஸ்ட் கார் மாடலான டிபி11 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. விலை விபரம் வெளியிடப்பட்டு விட்ட நிலையில் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாத துவக்கத்தில் டெலிவிரி துவங்கப்பட உள்ளதாக அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த காரை வாங்க விரும்பும் இந்திய வாடிக்கையாளர்களின் வசதிக்காக, நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த காரை பார்வைக்கு வைத்து வருகிறது அஸ்டன் மார்ட்டின். அதன்படி, மும்பையில் கடந்த இரு நாட்களாக இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போது எங்கள் நிருபர் அஜிங்கியா எடுத்த படங்களுடன் கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

சமீபத்தில் ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் வெளியிடப்பட்ட ஸ்பெக்டர் படத்தில் பயன்படுத்தப்பட்ட DBX கான்செப்ட் காரின் அடிப்படையில்தான் இந்த டிபி11 கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடந்த மோட்டார் ஷோவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கிராண்ட் டூரர் வகையில் மிகவும் தனித்துவமிக்க டிசைன் தாத்பரியங்களுடன், இலகுவான, உறுதிமிக்க அலுமினியம் பாகங்களுடன் கூடிய கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் பிரத்யேக க்ரில் அமைப்பு, ஆட்டோமேட்டிக் எல்இடிஹெட்லைட், வலிமையான தோற்றமுடைய பானட் ஆகியவை முத்தாய்ப்பாக உள்ளன.

சிறந்த ஏரோடனைமிக்ஸ் கொண்ட கார் மாடல் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் நவீன மின்னணு சாதனங்கள் கொண்ட கார் மாடலாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த காரில் இருக்கும் 600 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல மிகவும் சக்திவாய்ந்த 5.2 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த காரில் இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

0 - 100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 322 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது.

இந்த புதிய அஸ்டன் மார்ட்டின் கார் இந்தியாவில் ரூ.4.27 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும். வரும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாத துவக்கத்தில் இந்த காரின் டெலிவிரி துவங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கும் வருகிறது!

கடந்த இரு நாட்களாக மும்பையில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த கார் இன்றும், நாளையும் புனே நகரில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. அடுத்து வரும் 13 மற்றும் 14 தேதிகளில் கோவாவிலும், 16 மற்றும் 17 தேதிகளில் பெங்களூரிலும், 19 மற்றும் 20 தேதிகளில் சென்னையிலும், 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்திலும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Aston Martin Showcases James Bond’s Favorite Car In India. Read the complete details in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK