புதிய ஆடி ஏ4 சொகுசு செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

புதிய ஆடி ஏ4 சொகுசு செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஆடி ஏ4 சொகுசு செடான், ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் தயாரித்து வழங்கும் கார் ஆகும்.

ஆடி நிறுவனத்தின் தயாரிப்புகள், அவற்றின் ஸ்டைலான தோற்றம் மற்றும் இதர வசதிகளினால் மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது. தற்போது, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆடி ஏ4 சொகுசு செடான் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புதிய ஆடி ஏ4...

புதிய ஆடி ஏ4...

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆடி ஏ4 சொகுசு செடான், 1994-ல் ஆடி 80 காருக்கு மாற்றாக ஆடி ஏ4 அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, அறிமுகம் செய்யப்படும் 5-ஆம் தலைமுறை மாடல் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடான், ஒரே ஒரு இஞ்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. 4 சிலிண்டர்கள் உடைய இதன் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்ட் இஞ்ஜின், 148 பிஹெச்பியையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடானின் இஞ்ஜின், 7-ஸ்பீட் ஸ்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மோட்கள்;

மோட்கள்;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடான், 5 விதமான டிரைவிங் மோட்கள் கொண்டுள்ளது.

செயல்திறன்;

செயல்திறன்;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடான் நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடான், உச்சபட்சமாக மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

மைலேஜ்;

மைலேஜ்;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடானில் உள்ள 1.4 லிட்டர் இஞ்ஜின், 1.8 இஞ்ஜினுக்கு மாற்றாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த 1.4 லிட்டர் இஞ்ஜின் கொண்ட புதிய ஆடி ஏ4, முந்தைய மாடலை காட்டிலும் 43% கூடுதல் எரிபொருள் திறன் கொண்டுள்ளதால், இது ஒரு லிட்டருக்கு 17.84 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

டிசைன்;

டிசைன்;

டிசைன்படி, புதிய ஆடி ஏ4 சொகுசு செடான் இதன் முந்தைய மாடலை காட்டிலும், ஆக்கிரோஷமான டிசைன் கொண்டுள்ளது. இதன் முன் பக்கத்தில், ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் உடைய மெல்லிய ஆங்குளார் எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன.

இதன் அகன்ற ஹெக்ஸகனல் கிரில்லின் பக்கங்களில் மூடியவாறு உள்ள ஹெட்லேம்ப்கள் அமைப்பு, ஆடி ஆர்8 சூப்பர்காரில் உள்ளது போல் காட்சியளிக்கிறது.

பின்பக்க டிசைன்;

பின்பக்க டிசைன்;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடானின் பின் பக்கத்தில், டைனமிக் இன்டிகேட்டர்கள் உடைய ஸ்பிலிட் எல்இடி டெயில்லைட்கள் உள்ளன.

வீல்கள்;

வீல்கள்;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடான், 5-ஸ்போக்குகள் உடைய 17-இஞ்ச் அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடானில் வழக்கமான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கு பதிலாக ஆடியின் பெரிய விர்ச்சுவல் காக்பிட் டிஸ்பிளே போருத்தப்பட்டுள்ளது. இதன் டச்ஸ்கிரீன் இன்ஃபோடேயின்மென்ட் டிஸ்பிளே, வழக்கமான மல்டிமீடியா கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன், நேவிகேஷன் வசதியும் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடானில் வழக்கமான லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி உடன், இதன் டேஷ்போர்ட்டில் கட்டைகளினால் ஆன இன்செர்ட்கள் கொண்டுள்ளது. இது, இந்த காருக்கு பிரிமியம் தோற்றத்தை வழங்குகிறது. மேலும், இதில் 3-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடான், 8 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பார்க்கிங் கேமராக்கள், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடான், ஜாகுவார் எக்ஸ்இ, பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ் சி-கிளாஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விற்பனை;

விற்பனை;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடான், இந்தியா முழுவதும் உள்ள ஆடி ஷோரூம்களில் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது.

விலை;

விலை;

புதிய ஆடி ஏ4 சொகுசு செடானின் ப்ளஸ் வேரியன்ட், 38,10,000 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி / மகாராஷ்டிரா) விலையில் விற்கப்படுகிறது.

புதிய ஆடி ஏ4 சொகுசு செடானின் டெக்னாலஜி வேரியன்ட், 41,20,000 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி / மகாராஷ்டிரா) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரூ.27.33 லட்சத்தில் புதிய ஏ4 சொகுசு காரை அறிமுகப்படுத்திய ஆடி

ஆடி க்யூ2 மினி எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும்

நார்வே நாட்டு மன்னருக்காக உருவாக்கபட்ட ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட்

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
German carmaker Audi has launched all-new A4 luxury sedan in India. New A4 is fifth generation of the sedan produced by Audi, after A4 replaced Audi 80 in 1994. Audi offers five different driving modes in Audi A4. Audi A4 is available to purchase at Audi's dealerships across India. New A4's 1.4-litre engine is 43 percent more fuel efficient and returns mileage of 17.84km/l...
Story first published: Thursday, September 8, 2016, 19:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X