ரூ.40 லட்சம் மதிப்புடைய ஆடி காருடன் எஸ்கேப் ஆன 'போலி' டாக்டர்!

டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும் என்று கூறி ஆடி சொகுசு கார் ஒன்று ஹைதராபாத்தில் திருடிச் செல்லப்பட்டது. காருடன் எஸ்கேப் ஆன போலி டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

Written By:

இப்போதெல்லாம் திருடர்களின் இலக்கு அல்ப சல்பையாக இல்லை. சொகுசு கார்கள்தான் இப்போது திருடர்களின் முக்கிய இலக்காக மாறியிருக்கிறது. நாடு முழுவதும் சொகுசு கார்கள் திருடு போகும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.

நட்சத்திர விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் சொகுசு கார்களை லாவகமாக திருடி வந்த இளைஞர் ஒருவர் மும்பையில் சிக்கினார். இந்த நிலையில், ஹைதராபாத்திலுள்ள யூஸ்டு கார் டீலரிலிருந்து ஆடி சொகுசு கார் திருடி செல்லப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் நானி என்ற யூஸ்டு கார் ஷோரூமிற்கு நேற்று டிப்டாப் ஆசாமி ஒருவர் வந்துள்ளார். ஷோரூமின் உரிமையாளரான நரேந்திர குமாரிடம், தனது பெயர் கவுதம் ரெட்டி என்றும் அப்போலோ மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அங்கு நின்றிருந்த சொகுசு கார்களை அவர் பார்வையிட்டார். அங்கு நின்றிருந்த கார்களில் AP 28 DR 0005 என்ற பேன்ஸி நம்பருடன் நின்றிருந்த, பயன்படுத்தப்பட்ட ஆடி க்யூ3 சொகுசு கார் ஒன்றை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

அந்த கார் தமக்கு பிடித்துப் போய்விட்டதாகவும், அந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனை நம்பிய ஷோரூம் உரிமையாளர் நரேந்திர குமார் அந்த க்யூ3 காரை டெஸ்ட் டிரைவ் செய்ய அனுமதித்துள்ளார்.

தனது டீலரில் பணிபுரியும் விற்பனை பிரதிநிதி ஒருவரையும், அந்த காரில் உடன் அனுப்பியுள்ளார் நரேந்திர குமார். ஹைதராபாத் நகரை ஆடி க்யூ3 சொகுசு எஸ்யூவியில் ஒரு ரவுண்ட் அடித்த அந்த ஆசாமி, கடைசியில் அங்குள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

அங்கு சென்றதும், அப்போலோ மருத்துவமனையின் பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தி பார்க்க வேண்டும் என்று தெரிவித்து, காரில் இருந்த டீலர் பணியாளரை இறக்கிவிட்டுள்ளார். அதனை நம்பி டீலர் பணியாளரும் காரிலிருந்து இறங்கிவிட்டார்.

இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு அந்த ஆடி க்யூ3 காருடன் எஸ்கேப் ஆகிவிட்டான் அந்த கார் கொள்ளையன். இதனால், அதிர்ச்சியடைந்த டீலர் பணியாளர் தனது உரிமையாளர் நரேந்திர குமாருக்கு போனில் தகவலை தெரியப்படுத்தியிருக்கிறார்.

இதையடுத்து, கார் திருடிச் செல்லப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார் நரேந்திர குமார். காரின் மதிப்பு ரூ.40 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திருடிச் செல்லப்பட்ட காரை மீட்கும் முயற்சிகளை போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டெஸ்ட் டிரைவ் என்ற பெயரில் இதுபோன்று தொடர்ந்து கார்கள் திருடிச் செல்லப்பட்டு வருவது டீலர்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
A conman posing a doctor steals an Audi SUV while taking a test drive.
Please Wait while comments are loading...

Latest Photos