கலக்கலாக காலேஜ் செல்வதற்கு ஏற்ற டாப்-7 கார்கள்!

Written By:

கல்லூரி செல்லும்போது கெத்தாக செல்வதற்கு பைக் அல்லது கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது இளைஞர்களின் முதல் விருப்பமாக உள்ளது.

அவ்வாறு, கல்லூரி செல்லும் காளையர்களுக்கு ஏதுவான சிறந்த கார் மாடல்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். தோதுவான பட்ஜெட் மற்ரும் அடக்கமான ரக கார்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

ரெனோ க்விட்

இளைஞர்களை வசீகரிக்கும் வடிவமைப்பு. பட்ஜெட்டிலும் சரி, சிறப்பம்சங்களிலும் சரி இக்கால இளைஞர்களுக்கு ஏற்ற சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் க்ராஸ்ஓவர் டிசைன் நிச்சயம் எலலோரையும் திரும்பி பார்க்க வைக்கும்.

இந்த காரில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பிடித்துள்ளது. அதிலிருந்து நேவிகேஷன் வசதியையும் பெற முடியும். 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் எந்தவொரு சாலையிலும் கவலை இல்லாமல் ஓட்டிச் செல்ல வழி வகுக்கும். லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என்பதால், பாக்கெட் மணியில் அட்ஜெஸ்ட் செய்து விடலாம். ரூ.2.65 லட்சம் முதல் ரூ.3.96 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

செவர்லே பீட்

செவர்லே பீட் காரின் துள்ளலான வடிவமைப்பு கல்லூரி செல்லும் இருபாலருக்கும் ஏற்ற கார். பிற கார் மாடல்களிலிருந்து வேறுபடும் டிசைன் நிச்சயம் கல்லூரி இளசுகளை கவரும்.

செவர்லே பீட் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 டீசல் எஞ்சின் கொண்டதாக கிடைக்கிறது. இந்த காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 25.44 கிமீ மைலேஜையும் வழங்கும். ரூ.3.95 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

டட்சன் ரெடிகோ

விலை குறைவான வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட கார் மாடல். ரெனோ க்விட் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிக அடக்கமான காராக இருப்பதும், எளிதாக ஓட்ட முடியும்.

இந்த காரில் இருக்கம் 800சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 53 பிஎச்பி பவரையும் 72 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. இந்த காரும் லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும். ரூ.2.39 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ கார் செயல்திறனை விரும்புவோருக்கு மிகச் சிறப்பானதாக இருக்கம். பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மிகச் சிறப்பானதாகவும், வலுவான கட்டமைப்பு கொண்ட காராகவும் இருக்கிறது.

க்ரூஸ் கன்ட்ரோல், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இந்த கார் 74 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 86 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக கிடைக்கிறது. ரூ.5.46 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20

சொகுசு கார் போன்ற மிக கவர்ச்சிகரமான டிசைன் கொண்ட பிரிமியம் ஹேட்ச்பேக் கார். வேறு வண்ண ஸ்டிக்கரில் கூரை வண்ணத்தை மாற்றுவது மற்றும் விரும்பும் வகையில் ஸ்டிக்கர் அலங்காரம் செய்து மிக கவர்ச்சியாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்த காரில் ஏராளமான வசதிகள் இருக்கின்றன. இந்த காரில் 82 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது. ரூ.5.78 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

மாருதி பலேனோ

மாருதி பலேனோ காரும் பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் மிக கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. இதன் தோற்றம் வித்தியாசமாகவும், நளினமாகவும் இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுககும் பஞ்சமில்லை.

இந்த காரில் 83 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. ரூ.5.25 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் காம்பேக்ட் எஸ்யூவி மாடல். மிக வசீகரமான தோற்றம் கொண்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி நிச்சயம் எல்லோரையும் கவரும். அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளதால், மோசமான சாலைகளில் கூட கவலைப்படாமல் ஓட்ட முடியும்.

இந்த எஸ்யூவியில் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், எமெர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் மாடல் மைலேஜ், பெர்ஃபார்மென்ஸ் என இரண்டிலும் சிறந்ததாக இருக்கும். மேலும், 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலிலும், 1.5 லிட்டர் டீசல் மாடலிலும் கிடைக்கின்றது. ரூ.6.93 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது.

கவர்ச்சியான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் கார்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்கள் கார் வாங்கும்போது அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட மாடலையே தேர்வு செய்து வாங்குவது அவசியம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The best four-wheelers for college students in India looks into the price, mileage, specifications and most of all the performance and design of the cars.
Please Wait while comments are loading...

Latest Photos