குறைவான விலை பிஎம்டபிள்யூ சொகுசு செடான் கார் இந்தியா வர வாய்ப்பு!

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

Written By:

கடந்த மாதம் சீனாவில் நடந்த குவாங்ஸூ ஆட்டோமொபைல் கண்காட்சியில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புத்தம் புதிய 1 சீரிஸ் சொகுசு செடான் கார் அறிமுகம் செய்யப்பட்டது. முழுக்க முழுக்க சீன மார்க்கெட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்த கார் அங்குள்ள ஷெயாங் என்ற இடத்தில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐரோப்பிய மற்றும் இதர ஆசிய நாடுகளிலும் இந்த காருக்கு சிறப்பான வர்த்தக வாய்ப்பு இருப்பதாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சீனா தவிர்த்து பிற நாடுகளிலும் இந்த காரை பிற நாடுகளிலும் இந்த காரை விற்பனைக்கு கொண்டு செல்வது குறித்து பிஎம்டபிள்யூ பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் 4,456மிமீ நீளமும், 1,803மிமீ அகலமும், 1,446மிமீ உயரமும் கொண்டது. இந்த கார் 2,670மிமீ வீல் பேஸ் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. நேர் போட்டியாளர்களாக கருதப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ மற்றும் ஆடி ஏ3 கார்களை ஒப்பிடும்போது இது குறைவான வடிவம் கொண்ட மாடலாக இருக்கிறது.

தோற்றத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் டிசைன் தாத்பரியங்களுடன் காட்சி அளிக்கிறது. எல்இடி விளக்குகள், வலிமையான பானட், சிறுநீரக வடிவ இரட்டை க்ரில் அமைப்பு உள்ளிட்டவை முக்கியமானதாக இருக்கின்றன.

இரட்டை வண்ண இன்டீரியர் கொண்டதாக வந்துள்ளது. உட்புறத்தில் 8.8 அங்குல ஐடிரைவ் தொடுதிரை, ஹெட் அப் டிஸ்ப்ளே திரை உள்ளிட்டவை குறிப்பிட்டு கூற வேண்டிய அம்சங்கள். எனவே, நவீன காலத்துக்கு ஏற்ற பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

சீனாவில் விற்பனைக்கு செல்லும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர, 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் வருகிறது. இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

அடுத்த ஆண்டு மத்தியில் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் விலை கொண்டதாக இருக்கும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் குறைவான விலை கொண்ட சொகுசு செடான் கார் மாடலாக இருக்கும்.

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
BMW’s first front-wheel-drive sedan when launched in India, will compete with Mercedes CLA and Audi A3 sedan.
Please Wait while comments are loading...

Latest Photos