அப்படியா... புகாட்டி சிரோன் காருக்கு 3 ஆண்டுகள் வெயிட்டிங் பீரியட்!

Written By:

உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் மாடல் என்ற பெருமையை பெற்ற புகாட்டி வேரான் காருக்கு உற்பத்தி இலக்கு கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இதையடுத்து, புகாட்டி வேரான் காரின் வழித்தோன்றலாக, புதிய புகாட்டி சிரோன் ஹைப்பர் கார் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

டிசைன், சக்தி, தொழில்நுட்பம், விலை அனைத்திலும் புகாட்டி வேரான் காரை தூக்கி சாப்பிட்டது புகாட்டி சிரோன் கார். இந்த நிலையில், புகாட்டி சிரோன் காருக்கு இதுவரை 220 பெரும் பணக்கார வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 500 புகாட்டி சிரோன் கார்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டு 9 மாதங்களில் 220 புகாட்டி சிரோன் கார்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டிருப்பது ஒருபக்கம் ஏமாற்றம் தருவதாக கருதப்படுகிறது.

ரூ.17 கோடி விலை மதிப்புடைய இந்த காருக்கான பராமரிப்பு செலவும் மிக அதிகம். எனவே, பெரும் கோடீஸ்வரர்கள் கூட இந்த காரை ஒருமுறைக்கு இருமுறை யோசித்தே வாங்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

 

ஆனால், இந்த புதிய ஹைப்பர் காரை ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பு ஆர்வம் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த பின் முன்பதிவு செய்து கொள்வதற்கு ஆர்வமாக பல வாடிக்கையாளர்கள் காத்திருப்பதாக கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில்தான் புதிய புகாட்டி சிரோன் காரை அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம்களில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதன் பின்னர், முன்பதிவு விறுவிறுப்பு அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு மொத்தம் 65 புகாட்டி சிரோன் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்ய புகாட்டி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், புகாட்டி சிரோன் காரை இப்போது முன்பதிவு செய்தால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வரை காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

2018ம் ஆண்டில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டாலும் கூட காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் வாய்ப்பில்லாத நிலை இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் புகாட்டி சிரோன் காரின் டெலிவிரி துவங்கப்பட உள்ளது. அதன் பிறகு சாலைகளில் புகாட்டி சிரோன் காரின் தரிசனம் அதிக அளவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகாட்டி சிரோன் காரில் இருக்கும் 8.0 லிட்டர் டபிள்யூ16 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 1,479 பிஎச்பி பவரையும், 1,600 என்எம் டார்க்கையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 420 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
“The full focus is on building and delivering the Chiron for customers who have placed an order so far."
Please Wait while comments are loading...

Latest Photos