பெய்ஜிங் மோட்டார் ஷோவில் இருந்து இந்தியா பிரவேசிக்க உள்ள கார்கள்

By Ravichandran

பெய்ஜிங் மோட்டார் ஷோ, ஆசியாவில் தயாரிக்கபடும் கார்களை காட்சிபடுத்த முக்கியமான சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு சீனா தான் உலகிலேயே மிகப்பெரிய கார் சந்தையாகும்.

சீனாவில் கார்கள் காட்சிபடுத்தினால், அதன் மூலம் ஆசிய சந்தைகளுக்கே வேறு புதிய கார் மாடல்கள் விரைவில் வெளியாக உள்ளது என தெரிவிப்பதன் அறிகுறியாக அமைகிறது.

இந்தியா ஆசியாவில் உள்ளதால், சீனாவில் அறிமுகம் செய்யபடும் கார்களில் சில, இந்தியாவிலும் அறிமுகம் செய்யபட வாய்ப்புகள் உள்ளது.

இப்படி, 2016 பெய்ஜிங் மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தபட்டு, இந்தியாவில் வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபட வாய்ப்புகள் இருக்கும் வாகனங்கள் குறித்த தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ரெனோ கோலியாஸ்;

ரெனோ கோலியாஸ்;

இரண்டாம் தலைமுறை ரெனோ கோலியோஸ் 2016 பெய்ஜிங் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்டது. இது முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

இரண்டாம் தலைமுறை ரெனோ கோலியாஸ் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யபட உள்ளது. இரண்டாம் தலைமுறை ரெனோ கோலியாஸ், தற்போது விற்பனையில் உள்ள நிகழ் தலைமுறை காருக்கு மாற்றாக அமைய உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எல்டபுள்யூபி;

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எல்டபுள்யூபி;

எல்டபுள்யூபி எனப்படும் லாங் வீல் பேஸ் (Long Wheel Base (LWB)) கொண்ட கார்களுக்கு சீன வாகன சந்தையில் நல்ல டிமாண்ட் உள்ளது. இதனால், மெர்சிடிஸ் நிறுவனம், லாங் வீல் பேஸ் காரை வழங்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவை பொருத்த வரை, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் போது 12 மாடல்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. அந்த வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எல்டபுள்யூபி இந்தியாவில் அறிமுகம் செய்யபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எல்டபுள்யூபி, இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது அதற்கு போட்டியாக எந்த கார் மாடலும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. பின் பக்கத்தில் உள்ள பயணிகளுக்கு ஏராளமான இட வசதி இருக்கும். மேலும், இது ஏராளமான கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வாய்ப்புகளும் வழங்கபடுகிறது.

போர்ஷே 718 கேமேன்;

போர்ஷே 718 கேமேன்;

போர்ஷே 718 கேமேன் ஏராளமான மாற்றங்களுக்கு உட்படுத்தபட்டது. ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் போர்ஷே நிறுவனம், தற்போது இந்த காரை பெய்ஜிங்கில் அறிமுகம் செய்துள்ளது.

போர்ஷே 718 கேமேன் காரில், முன்பு இருந்த 6-சிலிண்டர் யூனிட்டுக்கு பதிலாக, 4 -சிலிண்டர் கொண்ட 4-சிலிண்டர் டர்போ சார்ஜ்ட் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

போர்ஷே இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற பிராண்டாக இருப்பதால், போர்ஷே 718 கேமேன் காரும் இந்தியாவிற்குள் கொண்டுவந்தால் அது ஆச்சர்யமான செய்தியாக இருக்காது.

ஆடி டிடி ஆர்எஸ்;

ஆடி டிடி ஆர்எஸ்;

ஆடி நிறுவனம் மற்றொரு ஜெர்மானிய கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது.

ஆடி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஆடி நிறுவனத்திடம் இருந்த சிறந்த சொகுசு கார் நிறுவனம் என்ற பட்டத்தை, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கைபற்றிவிட்டது. இந்த நிலையில் ஆடி நிறுவனம், ஆடி டிடி ஆர்எஸ் மாடலை இந்தியாவிற்குள் கொண்டு வர உள்ளது. ஆடி நிறுவனம், இந்த ஆடி டிடி ஆர்எஸ் மாடலை உலக அளவில் பல்வேறு சந்தைகளுக்கு கொண்டு செல்ல உள்ளது.

ஆடி டிடி மாடல் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை உள்ளதால், ஆடி டிடி ஆர் எஸ் மாடல் இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் வெர்னா;

ஹூண்டாய் வெர்னா;

ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் ஹூண்டாய் வெர்னா கான்செப்ட் 2016 பெய்ஜிங் மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தபட்டது. ஹூண்டாய் வெர்னா கான்செப்ட், வெரும் கான்செப்ட் நிலை கார் தான் என்றாலும், எலைட் ஐ20 காருக்கு வழங்கபட்டது போல், வெர்னா காருக்கும் பொலிவு கூட்டபட வேண்டும்.

தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் கார் நிறுவனமான ஹூண்டாய் மூலம் வழங்கபடும் மாடல்களில், வெர்னா நன்கு விற்பனையாகும் மாடலாக உள்ளது. உற்பத்தி நிலைக்கு தயாராக உள்ள கார் தயார் ஆனதும், உடனேயே இந்த புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விற்பனை இந்தியாவில் துவங்கிவிடும்.

ஃபோக்ஸ்வேகன் டி-பிரைம் கான்செப்ட் ஜிடிஇ;

ஃபோக்ஸ்வேகன் டி-பிரைம் கான்செப்ட் ஜிடிஇ;

ஃபோக்ஸ்வேகன் டி-பிரைம் கான்செப்ட் ஜிடிஇ, ஜெர்மானிய கார் உற்பத்தி நிறுவனத்தின் எலக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் வாகனங்கள் ரகத்தில் வருங்கால நோக்குடைய கார் ஆகும். இது 2020-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபடலாம்.

ஃபோக்ஸ்வேகன் டி-பிரைம் கான்செப்ட் ஜிடிஇ, ஆடி க்யூ7 மற்றும் பென்ட்லீ பென்டைகா ஆகிய கார் மாடல்களின் அதே அம்சங்களை கொண்டுள்ளது.

ஹோண்டா அவான்சியர்;

ஹோண்டா அவான்சியர்;

ஹோண்டா அவான்சியர் கடந்த வருடம் கான்செப்ட் டி என்ற பெயரில் ஷாங்காய் நகரில் காட்சிபடுத்தபட்டது. தற்போது, ஹோண்டா நிறுவனம், தற்போது தயார் நிலையில் உள்ள ஹோண்டா அவான்சியர் காரை 2016 பெய்ஜிங் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்தது.

ஹோண்டா அவான்சியர் தான், இந்நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்யூவியாக இருக்கும். இது ஹோண்டா ஹெச்-ஆர்வி மற்றும் சி-ஆர்வி ஆகிய மாடல்களுக்கு மேலே வகைபடுத்தபடும். ஹோண்டா அவான்சியர் சீனாவில் அறிமுகம் செய்யபட்ட உடன், பிற சர்வதேச சந்தைகளிலும் அறிமுகம் செய்யபடும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

உலகின் மிக விலை உயர்ந்த எஸ்யூவி கார்ல்மேன் கிங் அறிமுகம்

உலகின் மிக வேகமான எலக்ட்ரிக் சூப்பர் கார் ஆர்க்ஃபாக்ஸ் 7 அறிமுகம்

ஆஃப் பீட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
The 2016 Beijing Motor Show is on in Beijing, Capital of China. China is the largest car market in world for many carmakers. Showcasing cars here is good way to let Asian market know, some new car is arriving soon. Lots of Cars, which were shown in 2016 Beijing Motor Show would come to India Soon. To know more about cars coming to India, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X