கால் வைப்பதற்கு சிறப்பான இடவசதியை அளிக்கும் கார்கள்!

Written By:

பெரும்பாலான கார்களில் முன் இருக்கைகள் மிகச் சிறப்பான இடவசதியுடன், வசதியான இருக்கை அமைப்புடன் வருகின்றன. ஆனால், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் பெரும் பாடாக இருக்கும். நீண்ட தூரம் பயணிககும்போதும், குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு பயணிக்கும் போதும் மிக மோசமான அனுபவத்தை பெற வேண்டியதிருக்கும்.

இந்த நிலையில், பின் இருக்கையில் அமரும்போது ஓரளவு நெருக்கடி இல்லாத கால் வைப்பதற்கு போதுமான இடவசதி கொண்ட கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நானோ

ஆரம்ப ரக கார்களில் டாடா நானோ கார் ஓரளவு நல்ல இடவசதியை அளிக்கும் மாடல். இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியாக கூட இருக்கும். ஆம், பார்ப்பதற்கு சிறிய காராக இருந்தாலும், ஆல்ட்டோ உள்ளிட்ட கார்களை ஒப்பிடும்போது இந்த காரின் இடவசதி சிறப்பாகவே கூற முடியும்.

மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் காரில் உயரமானவர்கள் கூட வசதியாக அமர்ந்து கொள்ள முடியும். இந்த காரில் பின் இருக்கையில் 2 பேர் மட்டுமே வசதியாக அமர முடியும் என்றாலும், ஹெட்ரூம், லெக்ரூம் நன்றாகவே இருக்கிறது. அதாவது, இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இந்த கார் நன்றாக உள்ளது.

டாடா போல்ட்

பொதுவாக டாடா கார்கள் சிறப்பான இடவசதியை அளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த வகையில், டாடா போல்ட் காரும் சிறப்பான பின் இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. ஹெட்ரூம், லெக்ரூம் என இரண்டும் சிறப்பானதாக கூறலாம்.

ஹோண்டா ஜாஸ்

பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஹோண்டா ஜாஸ் கார் சிறப்பான இடவசதியை அளிக்கிறது. பின் இருக்கையில் 3 பெரியவர்கள் அமர்வதற்கான இடவசதியை வழங்குவதால் இந்த செக்மென்டடில் சிறப்பான இடவசதி கொண்டதாக கூறலாம். அதேநேரத்தில், விலை உள்ளிட்ட இதர அம்சங்களில் உங்கள் தேர்வு மாறுபடலாம்.

ஹோண்டா அமேஸ்

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் டாடா ஸெஸ்ட், ஃபோர்டு ஆஸ்பயர் மற்றும் ஹோண்டா அமேஸ் கார்கள் சிறப்பான இடவசதி கொண்ட பின் இருக்கையை பெற்றிருக்கின்றன. இருப்பினும், இந்த மூன்று கார்களில் ஹோண்டா அமேஸ் கால் வைப்பதற்கு மிக சிறப்பான இடவசதியை வழங்குகிறது.

மஹிந்திரா டியூவி 300

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் மஹிந்திரா டியூவி 300 சிறந்த ஹெட்ரூம், லெக்ரூம் இடவசதி கொண்டது. மேலும், 7 சீட்டர் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. அதேநேரத்தில், நேரடி போட்டியாளர்களான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பின் இருக்கையில் 2 பேர் அமர்ந்து செல்வதற்கான சிறப்பான இடவசதியையும், கால் தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் தரும் இருக்கை அமைப்பையும் கொண்டுள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா சராசரியான இடவசதியை கொண்டுள்ளது.

மாருதி சியாஸ்

மிட்சைஸ் செக்மென்ட்டில் ஏராளமான கார்கள் குவிந்துவிட்டன. அதில், ஹோண்டா சிட்டி, நிசான் சன்னி, ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ உள்ளிட்ட கார்களுடன் ஒப்பிடும்போது மாருதி சியாஸ் சிறப்பான லெக்ரூம் இடவசதியை கொண்டுள்ளது. அடுத்ததாக, ஹோண்டா சிட்டிதான் சிறப்பானதாக கூறலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

எஸ்யூவி செக்மென்ட்டில் இரண்டாவது வரிசையில் மிகச் சிறப்பான லெக்ரூம் இடவசதியை அளிக்கும் மாடல் மஹிந்திரா எக்ஸ்யூவி 500. சொகுசான இருக்கைகளுடன் இரண்டாது வரிசையில் மூன்று பயணிகள் தாராளமாக அமர்ந்து செல்ல முடியும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

மூன்று வரிசை இருக்கை அமைப்புடைய கார்களில் மிகச்சிறப்பான லெக்ரூம் இடவசதி கொண்ட கார் மாடல். கேப்டன் இருக்கைகள் கொண்ட 7 சீட்டர் மாடல்கூட இன்னும் சிறப்பான இடவசதியை தருகிறது.

ஒவ்வொரு செக்மென்ட்டிலும் சிறந்த லெக்ரூம் இடவசதியை அளிக்கும் கார்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. டிசைன், வசதிகள், மைலேஜ், விலை போன்ற இதர அம்சங்களில் இந்த கார்கள் உங்கள் தேர்விலிருந்து மாறுபடலாம்.

English summary
cars with Best Rear Seat Legroom. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos