எஃப்வி2030 என்ற பெயரில் வருங்கால நோக்குடைய வினோதமான எஸ்யூவி அறிமுகம்

By Ravichandran

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில், நடைபெற்று வரும் பெய்ஜிங் மோட்டார் ஷோவில் எஃப்வி2030 என பெயரிடபட்ட வருங்கால நோக்குடைய வினோதமான எஸ்யூவி அறிமுகம் செய்யபட்டது.

ஆட்டோமொபைல் சந்தைகளில், எஸ்யூவிகள் ஆதிக்கம் நாளுக்குநாள் பெருகி கொண்டே இருக்கிறது.

வருங்காலத்தில் எஸ்யூவிகள் எப்படி இருக்கும் என தெரியுமா?

பெய்ஜிங் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்ட எஃப்வி2030 எஸ்யூவி கான்செப்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

எஃப்வி2030...

எஃப்வி2030...

எஃப்வி2030 என பெயர் சூட்டபட்டுள்ள இந்த வினோதமான எஸ்யூவி கான்செப்ட், சீன அரசுக்கு சொந்தமான ஷெரி என்ற கார் தயாரிப்பு நிறுவனத்தினால் தயாரிக்கபடுகிறது.

பெய்ஜிங் மோட்டார் ஷோ...

பெய்ஜிங் மோட்டார் ஷோ...

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நிகழும் பெய்ஜிங் மோட்டார் ஷோ, ஏப்ரல் 25 துவங்கி மே 4, 2016 வரை நடைபெறுகிறது.

பெய்ஜிங் மோட்டார் ஷோவில் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி முதல் மிக வேகமான எலக்ட்ரிக் சூப்பர்கார் என அனைத்து வகையிலான வாகனங்களும் இடம் பெற்றுள்ளன.

வருங்கால நோக்குடைய கார்?

வருங்கால நோக்குடைய கார்?

பெய்ஜிங் மோட்டார் ஷோவில், அறிமுகம் செய்யபட்ட இந்த எஃப்வி2030 எஸ்யூவி கான்செப்ட், நிஜமாகவே வித்தியாசமாக காட்சி அளிக்கும் வாகனமாக உள்ளது.

2030-ஆம் ஆண்டுகளில், எஸ்யூவிகள் இப்படி தான் இருக்கும் என கருதபடுகிறது.

முக்கிய அம்சம்;

முக்கிய அம்சம்;

எஃப்வி2030 எஸ்யூவி கான்செப்ட், நீண்ட மற்றும் மெல்லிய பாடி கொண்டுள்ளது.

இது கல்விங் டோர்கள் வகையிலான கதவு அமைப்பு கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

எஃப்வி2030 எஸ்யூவி கான்செப்ட், முன்பக்கத்தில், பெரிய கிரில் கொண்டுள்ளது. இந்த கிரில் மீது மெல்லிய குரோம் பட்டை உள்ளது. இந்த குரோம் பட்டையில் தான் சிறிய ஹெட்லேம்ப்கள் பொருத்தபட்டுள்ளது.

எஃப்வி2030 எஸ்யூவி கான்செப்ட் காரின் பின் பக்கத்திலும் இதே போன்ற தோற்றம் வழங்கபட்டுள்ளது.

ஃப்ரண்ட், ரியர்;

ஃப்ரண்ட், ரியர்;

எஃப்வி2030 எஸ்யூவி கான்செப்ட் காரின் முன் பக்கத்திலும், பக்கவாட்டிலும், பின் பக்கத்திலும் ஸ்கிட் பிளேட்கள் சேர்க்கபட்டுள்ளது.

வீல்;

வீல்;

எஃப்வி2030 எஸ்யூவி கான்செப்ட் காரின் வீல் ஆர்ச்களுக்கு, குரோம் பூச்சு வழங்கபட்டுள்ளது.

இதன் அல்லாய் வீல்களும், வேடிக்கையாக உள்ளது.

தொழில்நுட்ப அம்சம்;

தொழில்நுட்ப அம்சம்;

ஏர் இண்டேக் கொண்டுள்ள போதிலும், எஃப்வி2030 எஸ்யூவி கான்செப்ட் காரில் இண்டர்னல் கம்பஸ்ஷன் இஞ்ஜின் பிரயோகிக்கபடவில்லை. அதற்கு மாறாக புரொபெல்ஷனுக்கு எலக்ட்ரிக் மோட்டார்களும், பேட்டரி பேக்கும் பயன்படுத்தபடுகிறது.

வேடிக்கையாக காட்சி அளிக்கும் அல்லாய் வீல்கள், வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டத்திற்கு ஹப்-களாக செயல்படுகின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

உலகின் மிக விலை உயர்ந்த எஸ்யூவி கார்ல்மேன் கிங் அறிமுகம்

உலகின் மிக வேகமான எலக்ட்ரிக் சூப்பர் கார் ஆர்க்ஃபாக்ஸ் 7 அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் வழங்கும் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் விரைவில் அறிமுகம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
A Crazy SUV concept named FV2030 produced by Chinese government owned carmaker Chery was introduced in Beijing Motor Show held in Beijing, China. This SUV concept is touted to be the Car of the future. This Car features long and sleek body with gullwing doors. This features electric motors and a battery pack for propulsion.To know more, check here...
Story first published: Friday, April 29, 2016, 13:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X