செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் காரின் அறிமுகம் எப்போது?

விரைவில் புதிய காம்பேக்ட் செடான் காரை செவர்லே நிறுவனம் இந்தியாவில் களமிறக்க உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

செவர்லே பிராண்டு இந்தியாவில் தடுமாறி வருகிறது. விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாத நிலையில் மாசு உமிழ்வு பிரச்னையில் சிக்கியது. இதனால், அந்த பிராண்டின் மீதான நம்பகத்தன்மை வாடிக்கையாளர்கள் மத்தியில் வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் கவரும் வகையில், புதிய மாடல்களை களமிறக்கி நன்மதிப்பை உயர்த்திக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய காம்பேக்ட் செடான் கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

 செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் காரின் அறிமுகம் எப்போது?

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே எசென்சியா என்ற காம்பேக்ட் செடான் கார் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அந்த கார்தான் விரைவில் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது.

 செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் காரின் அறிமுகம் எப்போது?

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட பல கார் காம்பேக்ட் செடான் ரக கார்களுக்கு போட்டியாக செவர்லே எசென்சியா கார் களமிறக்கப்பட உள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் செவர்லே பீட் காரின் செடான் வெர்ஷனாக இது வர இருக்கிறது. எனவே, உருவ ஒற்றுமை அதிகமிருக்கிறது.

 செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் காரின் அறிமுகம் எப்போது?

செவர்லே பீட் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள்தான் இதிலும் பயன்படுத்தப்படும். இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 76.8பிஎச்பி பவரையும், 106.5 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

 செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் காரின் அறிமுகம் எப்போது?

டீசல் மாடலில் இருக்கும் 1.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 56.3 பிஎச்பி பவரையும், 142.5 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது.

 செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் காரின் அறிமுகம் எப்போது?

உட்புறத்தில் கவர்ச்சியான வடிவமைப்புடன், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படும். மேலும், செவர்லே நிறுவனத்தின் மைலிங் தொடர்பு சாஃப்ட்வேரும் கொண்டதாக இருக்கும். செவர்லே பீட் காரைவிட பின்புறத்தில் இடவசதி மேம்பட்டிருக்கும் என நம்பலாம்.

 செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் காரின் அறிமுகம் எப்போது?

இந்த காரில் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்று இருக்கும்.

 செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் காரின் அறிமுகம் எப்போது?

செவர்லே எசென்சியா கார் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 செவர்லே எசென்சியா காம்பேக்ட் செடான் காரின் அறிமுகம் எப்போது?

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸ்சென்ட், ஃபோர்டு ஆஸ்பயர், ஃபோக்ஸ்வேகன் அமியோ, டாடா ஸெஸ்ட் என பல மாடல்கள் வரிசை கட்டி நிற்கும் போட்டி மிகுந்த காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் செவர்லே எசென்சியாவும் களமிறங்க உள்ளது.

Most Read Articles
English summary
The upcoming compact sedan, the Chevrolet Essentia is expected to be launched in India by March 2017.
Story first published: Monday, December 12, 2016, 9:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X