டட்சன் ரெடிகோ ஸ்போர்ட் காருக்கு அமோக வரவேற்பு... உற்பத்தி அதிகரிக்க முடிவு!

Written By:

டட்சன் பிராண்டில் வாடிக்கையாளர்களுக்கு தோதுவான விலை கொண்ட பட்ஜெட் ரக கார்களை நிசான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. டட்சன் பிராண்டில் வெளியிடப்பட்ட டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

ஆனால், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டட்சன் ரெடிகோ கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி, கடந்த மாதம் டட்சன் ரெடிகோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

டட்சன் ரெடிகோ ஸ்போர்ட் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த புதிய கார் மாடலுக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. நிர்ணயிக்கப்பட்ட 1,000 கார்களும் விற்று தீர்ந்துவிட்டன. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து டடச்ன் ரெடிகோ ஸ்போர்ட் மீது அதிக ஆர்வம் காட்டி வருவதையடுத்து, அவர்களை ஏமாற்றத்தை தவிர்க்க நிசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, கூடுதலாக 800 டட்சன் ரெடிகோ ஸ்போர்ட் கார்களை உற்பத்தி செய்ய நிசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரெனோ - நிசான் கூட்டு நிறுவனத்தின் CMF-A பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டது.

பெரும் வெற்றியை பெற்றிருக்கும் ரெனோ க்விட் தயாரிக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் டட்சன் ரெடிகோ காரும் தயாரானது. இந்த நிலையில், டட்சன் ரெடிகோ காரில் கூடுதலாக சேர்க்கப்பட்ட ஸ்பெஷல் விஷயங்கள் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

ராலி ரேஸ் கார்கள் போன்ற தோற்றத்தை தரும் வலிமையான கருப்பு கோடுகள், கருப்பு வண்ண க்ரில், அதில் சிவப்பு அலங்காரம், ஸ்பாய்லர், கவர்ச்சியான அலாய் வீல்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், கருப்பு வண்ண சைடு மிரர்கள் போன்றவை சிறப்பு சேர்க்கின்றன.

உட்புறத்தில் முழுவதும் கருப்பு வண்ண அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதுடன், சிவப்பு வண்ண பாகங்களால் ஆங்காங்கே அலங்கரிக்ப்பட்டிருக்கிறது. புளுடூத் வசதியுடன் ஆடியோ சிஸ்டமும் இதற்கு சிறப்பு சேர்க்கிறது. மொத்தம் 9 விதமான கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த கார் கிடைக்கிறது.

சிவப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் வண்ண நிறங்களில் கிடைக்கிறது. ரூ.3,46,479 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அனைத்து நிசான்- டட்சன் ஷோரூம்களில் இந்த புதிய காருக்கு முன்பதிவு செய்து வாங்கலாம்.

English summary
Limited edition batch of Datsun redi-GO SPORT sold out within one month.
Please Wait while comments are loading...

Latest Photos