டெல்லியில் டீசல் வாகனங்கள் மீதான தடை: உச்சநீதிமன்றத்தில் கார் நிறுவனங்கள் மேல்முறையீடு

By Ravichandran

டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பகுதியில் டீசல் வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, கார் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.

டெல்லி என்சிஆர் பகுதிகளில், 2000 சிசி-க்கும் கூடுதலான திறன் உடைய டீசல் இஞ்ஜின் கொண்ட வாகனங்கள் விற்பதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம்16ந் தேதி ஆணை வழங்கியது.

இதை எதிர்த்து, மஹிந்திரா, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் டொயோட்டா உள்ளிட்ட மூன்று கார் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தன. இது மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது.

delhi-diesel-cars-ban-mahindra-mercedes-toyota-appeals-to-supreme-court

தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள சேட்டிலைட் நகரங்கள் மிகவும் மாசு அடைந்த நிலையில் உள்ளது. இதன் மாசு அளவுகளை குறைக்கும் வகையில் தான், உச்சநீதிமன்றம் டீசல் வாகனங்களின் விற்பனையின் மீதான இத்தகைய கடுமையான தடைகள் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகளுக்கு, கிளிக் செய்க;

டெல்லியில் டீசல் இஞ்ஜின் வாகனங்களுக்கு விதிக்கபட்ட தடையை அகற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

Most Read Articles
English summary
Mahindra, Toyota And Mercedes Benz appeal against the Supreme Court ban, against the Diesel Cars above 2000cc. On December 16, 2015, Supreme Court passed very strict order against the sale of Diesel Engine based cars. The Supreme court is taking up the case of appeal by the trio of automakers for further proceedings.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X