500,1000 நோட்டுகளுக்கு தடை எதிரொலி: கார்களுக்கு 100 சதவீத கடன் வசதி திட்டம்!

500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக கார் விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த மந்த நிலையை தவிர்த்துக் கொள்வதற்காக சிறப்பு திட்டங்களை கார் நிறுவனங்களும், இருசக

Written By:

கடந்த 8ந் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தை முறைப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், செல்லாது அறிவிப்பு கார் மார்க்கெட்டிலும் கடுமையாக எதிரொலித்து வருகிறது. நம் நாட்டில் 80 சதவீத கார்கள் கடனில் வாங்கப்பட்டாலும், விலை உயர்ந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை ரொக்கம் கொடுத்தே வாங்கப்படுகின்றன.

இந்த நிலையில், செல்லாது அறிவிப்பு காரணமாக புதிய கார்களுக்கான முன்பதிவு வெகுவாக குறைந்துவிட்டது. நாடு முழுவதும் கார் விற்பனை 25 சதவீதம் வரை குறையும் என்று சந்தை நிபுணர்கள் கணித்து கூறியிருக்கின்றனர். குறிப்பாக, கடந்த 10 நாட்களில் மட்டும் டெல்லியில் கார்களுக்கான முன்பதிவு 70 சதவீதம் குறைந்துவிட்டதாம்.

மேலும், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களும் ரத்து செய்ய துவங்கியிருக்கின்றனர். உதாரணத்திற்கு புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்கள் பலர் தங்களது முன்பதிவை ரத்து செய்து வருகின்றனராம்.

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்கு பின்னர் புதிய கார்களுக்கான முன்பதிவு வெகுவாக குறைந்துவிட்டதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், செல்லாது அறிவிப்பால் அதிக பாதிப்பு இல்லை என்று நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி தெரிவித்துள்ளது.

தங்களது வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானோர் கடனில் வாங்குவதால் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், செல்லாது அறிவிப்பால் ஏற்பட்டிருக்கும் மந்த நிலைக்கு தீர்வு காணும் வகையில், வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க காரின் ஆன்ரோடு விலையில் 100 சதவீத கடன் வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளன.

இதற்காக, எச்டிஎஃப்சி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ ஆகிய வங்கிகளுடன் ஹோண்டா கார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஹூண்டாய் கார் நிறுவனமும் இந்த 100 சதவீத கார் கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எச்டிஎஃப்சி, கோடக், ஆக்சிஸ் வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, ஆண்டு கடைசியில் எப்போதுமே கார் விற்பனை மந்தமாக இருக்கும் என்பதால், கூடுதல் சிறப்புச் சலுகைகளும் வழங்குவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இதே பாணியை கையாள பிற கார் நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை 15 சதவீதம் குறைந்துவிட்டது. மேலும், ரொக்கமாக செலுத்த இயலாத வாடிக்கையாளர்களுக்காக வங்கி அட்டைகள் மூலமாக பணம் செலுத்துவதற்கான வசதிகளையும் கட்டணமில்லாமல் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
As a result of currency ban in India, most of the two wheeler and four wheeler manufacturers are offering 100 percent finance options on their vehicles.
Please Wait while comments are loading...

Latest Photos