டெஸ்லாவின் புதிய எலெக்ட்ரிக் மினி பஸ் எப்படியிருக்கும்?

By Meena

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆட்டோ மொபைல் நிறுவனமான டெஸ்லா, தனது இரண்டாம் கட்ட தொலைநோக்குத் திட்ட அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் என்னவென்றால், கனரக எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வோம் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்துதான்.

அந்த எலெக்ட்ரிக் வாகனங்களில் பயணிகள் மினி பஸ்ஸும் அடங்கும். டெஸ்லாவின் இந்த அறிவிப்பால் ஏற்கெனவே அத்தகைய வாகனங்களைத் தயாரித்து வரும் ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள் சற்று கதிகலங்கிப் போயுள்ளன.

டெஸ்லா மினி பஸ்

சரி, இப்போதைய ஹாட் டாபிக் என்னவென்றால், டெஸ்லா நிறுவனம் தயாரிக்கப் போகும் மினி பஸ்கள் குறித்த சில தகவல்களை அதன் தலைவர் எலன் மஸ்க் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

அந்த எலெக்ட்ரிக் மினி பஸ் எஸ்யூவி மாடலில் இருக்கப் போவதை அவர் உறுதி செய்துள்ளார். அதுவும் எப்படி? இது தொடர்பாக அமெரிவிக்காவின் ஜெலோப்னிக் என்ற வலை தள செய்தி நிறுவனம், டெஸ்லாவின் புதிய தயாரிப்புகள் தொடர்பாக ஒரு கட்டுரையை வெளியிட்டது.

டெஸ்லாவின் மினி பஸ்கள், வேன் வடிவில்தான் இருக்க வேண்டுமா? எஸ்யூவி மாடலில் ஏன் வரக் கூடாது? என்றும் அதில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவு வெளியிட்ட மஸ்க், ஜெலோப்னிக்கின் யூகம் சரிதான். மாடல் எக்ஸ் சேசிஸை அடிப்படையாகக் கொண்ட எஸ்யூவி மினி பஸ்ஸை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், டெஸ்லாவின் மினி பஸ் எப்படி வரப் போகிறது? என்பது தொடர்பான தெளிவு ஓரளவு கிடைத்திருக்கிறது. அதேபோல் டெஸ்லா தயாரிக்கப் போகும் காம்பேக்ட் எஸ்யூவி கார் குறித்த தகவலையும் எலன் மஸ்க் வெளியிட்டுள்ளார். மாடல் 3 என்று அதற்கு பெயர் வைக்கப்படும் என்றும், மாடல் ஒய் சேசிஸை அடிப்படையாகக் கொண்டு அது வடிவமைக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

டெஸ்லா தயாரிப்புகளில் வெளியாகும் வாகனங்களின் கூரைகளில் சூரிய ஒளி மின்தகடுகள் (சோலார் பேனல்) பொருத்தப்படும் என்றும் எலன் மஸ்க் அண்மையில் தெரிவித்தார். கார் இயங்கினாலும் சரி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் சரி, சோலார் பேனல்கள் செயல்படும் வகையில் அவை வடிவமைக்கப்பட உள்ளதாம்.

இதன் மூலம் பேட்டரிக்குத் தேவையான மின் சக்தியை காரில் பொருத்தப்பட்ட சூரிய ஒளி மின்தகடுகளில் இருந்தே பெற்றுக் கொள்ள முடியும்.

அதேபோல், மாடல் 3 காரை விடக் குறைவான விலையில் எந்த வாகனத்தையும் விற்பனை செய்வதற்கான திட்டம் புதிய பிளானில் இல்லை என்றும் சமீபத்தில் எலன் மஸ்க் தெளிவுபடுத்தியிருந்தார்.

அதிக பாதுகாப்புடன் கூடிய தானியங்கி வாகனங்களைத் தயாரிக்கவும் டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேனுவலாக வாகனத்தை இயக்குவதைக் காட்டிலும் அதிக கவனத்துடன் செயல்படும் வகையில் இந்த வசதி வடிவமைக்கப்படும் என்று டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆட்டோ மொபைல் உலகில் புதிய போட்டிக் களத்தை உருவாக்கக் காத்திருக்கிறது டெஸ்லா. நாமும் காத்திருப்போம்...

Most Read Articles
English summary
Elon Musk Confirms Tesla Minibus.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X