ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

ஃபியட் நிறுவனம் தயாரித்து வழங்கும் ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் பண்டிகை காலங்களின் போது ஏராளமான ஆட்டோமொபைல் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் பல்வேறு டூ வீலர்கள் மற்றும் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் பற்றிய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ்...

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ்...

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ், அவென்ச்சுரா கிராஸ்ஓவரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் குணாம்சங்கள், அவென்ச்சுரா கிராஸ்ஓவரை காட்டிலும் சற்று மென்மையாக உள்ளது. இந்த ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடல் தான், இந்த செக்மென்ட்டிலேயே மிகவும் விலை குறைவான டீசல் வாகனம் என ஃபியட் நிறுவனம் தெரிவிக்கிறது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ், ஆக்டிவ் மற்றும் டைனமிக் என இரு ட்ரிம்களில் கிடைக்கிறது.

டீசல் இஞ்ஜின் ட்ரிம்கள்;

டீசல் இஞ்ஜின் ட்ரிம்கள்;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் ஆக்டிவ் மற்றும் டைனமிக் ட்ரிம்களுமே 1.3-லிட்டர் மல்டிஜெட் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இதன் இஞ்ஜின், 94 பிஹெச்பியை வெளிப்படுத்தும்.

பெட்ரோல் வேரியன்ட்;

பெட்ரோல் வேரியன்ட்;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் பெட்ரோல் வேரியன்ட், அபார்த்-தின் 1.4 லிட்டர், டி-ஜெட் இஞ்ஜின் கொண்டுள்ளது. 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இதன் இஞ்ஜின் 138 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது எமோஷன் ட்ரிம்-மில் மட்டுமே கிடைக்கும்.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர் பொருத்த வரை, ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடல், புதிய கிரில், ஸ்கிட் பிளேட்கள் உடைய பிரண்ட் மற்றும் ரியர் டியூவல் டான் பம்பர்கள் கொண்டுள்ளது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடல், பியானோ பிளாக் பெயின்ட் வண்ணத்திலான 16-இஞ்ச் அல்லாய் கொண்டுள்ளது. மேலும், ஸ்போர்ட்டியான ஸ்பாய்லர் (அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்ட் அம்சம்), ஸ்மார்ட் சைட் பாடி கிளாட்டிங், ரூஃப் ரெயில்கள், இதன் தோற்றத்தை மேம்படுத்துகிறது.

எமோஷன் வேரியன்ட், 16 இஞ்ச் அளவிலான ஸ்கார்ப்பியன் அல்லாய் கொண்டுள்ளது. ஆக்டிவ் மற்றும் டைனமிக் ட்ரிம்கள், டைமன்ட்-கட் ஃபினிஷிங் செய்யப்பட்ட பியானோ பிளாக் 16 இஞ்ச் இஞ்ச் அல்லாய் வீல்கள் கொண்டுள்ளன.

இன்டீரியர்;

இன்டீரியர்;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் உட்புறத்தில், சென்ட்ரல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர் லாக்கிங், சாஃப்ட் டச் ஃபிரண்ட் பேணல் உடைய டியூவல் டோன் டேஷ்போர்ட், ரியர் ஏசி வென்ட்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும், டிலே மற்றும் ஆட்டோ-டவுன் பங்க்ஷன் உடைய ஃபிரண்ட் ஸ்மார்ட் பவர் விண்டோக்கள் இஞ்ஜின் ஆஃப் செய்த உடன் மேலே சுழன்று மூடி கொள்கிறது.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடல், டச் ஸ்கிரீன் நேவிகேஷன் (அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்ட் அம்சம்), புளூடூத் ஆடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் டெலிஃபோனி வசதி உடைய ஸ்மார்ட்டெக் 5-இஞ்ச் மியூசிக் சிஸ்டம் கொண்டுள்ளது.

குறுகிய கால சலுகை;

குறுகிய கால சலுகை;

வண்ண ஒத்திசைவு உடைய டோர் இன்செர்ட்கள் (colour coordinated door inserts) கொண்ட பிரிமியம் பர்கண்டி டிசைனர் இன்டீரியர், பியானோ ஃபினிஷ் டோர் ஆரம்ரெஸ்ட்கள், பேட்ஜிங் உடைய டிசைனர் சீட்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உடனான ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடல், குறுகிய கால சலுகையாக வழங்கப்படுகிறது.

இத்தகைய ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடல், பண்டிகை காலம் வரை மட்டுமே அளிக்கப்படும். அதுவும், டைனமிக் டீசல் மற்றும் எமோஷன் பெட்ரோல் வேரியன்ட்கள் மீது மட்டுமே கிடைக்கும்.

டெலிவரி;

டெலிவரி;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் டெலிவரி, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

விலை;

விலை;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடல், பண்டிகை காலத்தின் போது அறிமுகம் செய்யப்படுவதை ஒட்டி, 6.85 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஸ்பெஷல் அறிமுக விலையில் கிடைக்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் புக்கிங் துவங்கியது

ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ் மாடலின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு

ஃபியட் அவென்டூரா கிராஸ்ஓவர் அறிமுகம் - படங்களுடன் விபரம்

Most Read Articles
மேலும்... #ஃபியட் #fiat
English summary
Fiat Chrysler Automobiles (FCA) India has launched their Fiat Avventura Urban Cross in India. Fiat claims that, this is the most affordable diesel vehicle in its segment. Fiat announced that nationwide delivery of new Avventura Urban Cross starts from October 1, 2016. Avventura Urban Cross will be available in two trims of Active and Dynamic. To knowm more, check here...
Story first published: Saturday, September 24, 2016, 12:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X