ஃபியட் புன்ட்டோ, லீனியா கார்களின் லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்!

ஃபியட் புன்ட்டோ மற்றும் ஃபியட் லீனியா கார்களின் சிறப்பு பதிப்பு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

ஃபியட் நிறுவனம் சிறந்த கார்களை கொண்டிருந்தாலும், அந்த நிறுவனத்தின் விற்பனை ஏனோ மாதத்திற்கு மாதம் மிக மோசமான நிலையை எட்டி வருகிறது. கடந்த மாதம் மொத்தமாகவே 266 கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விதத்தில் அதிக சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்ட புன்ட்டோ மற்றும் லீனியா கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபியட் புன்ட்டோ கார்பன் எடிசன் மற்றும் ஃபியட் லீனியா ராயல் எடிசன் என்ற பெயர்களில் இந்த விசேஷ பதிப்பு மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் விசேஷ அலங்காரத்துடன் வந்திருக்கும் இந்த மாடல்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களை கொண்டுள்ளன.

இரண்டு கார்களுமே டியூவல் டோன் எனப்படும் இரட்டை வண்ணக் கலவையில் கிடைக்கும். அதாவது, வெள்ளை வண்ண காரில் பியானோ பிளாக் ஃபினிஷ் என்ற பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ண கூரையுடன் வந்துள்ளன. இது காருக்கு குந்த கவர்ச்சியை தருவதாக இருக்கிறது.

புன்ட்டோ காரின் பக்கவாட்டில் ஸ்டிக்கர் வேலைப்பாடுகள் மற்றும் கார்பன் எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் லீனியா காரில் ராயல் என்ற பேட்ஜ் பதிக்கப்பட்டுள்ளது. இதனால், சாதாரண மாடல்களிலிருந்து இந்த சிறப்பு பதிப்பு மாடல் எளிதாக வேறுபடுத்தப்படுகிறது. கன் மெட்டல் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஃபியட் லீனியா காரின் உட்புறத்தில் கருப்பு மற்றும் பழுப்பு வண்ணக் கலவை கொண்ட டேஷ்போர்டு கவர்ச்சியாக இருக்கிறது. புதிய பழுப்பு வண்ண லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. புன்ட்டோ காரின் உட்புறம் முழுவதும் கருப்பு வண்ண ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

மேற்கண்ட அலங்கார அம்சங்கள் தவிர்த்து ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஸ்ப்ளாஷ் கார்டுகள், விசேஷ மிதியடிகள், டோர் சில்கள் என கூடுதல் ஆக்சஸெரீகளும் இடம்பெற்று இருக்கின்றன. ஃபியட் லீனியா ராயல் எடிசன் காரில் 145 பிஎஸ் பவரை வழங்க வல்ல 1.4 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினும், புன்ட்டோ கார்பன் எடிசன் காரில் 90 பிஎஸ் பவரை அளிக்க வல்ல 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டுள்ளன.

ஃபியட் புன்ட்டோ மற்றும் லீனியா கார்களின் சாதாரண வேரியண்ட்டுகளைவிட இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.35,000 கூடுதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள ஃபியட் டீலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Fiat India has introduced Punto Karbon & Linea Royale Limited Edition Models in India.
Please Wait while comments are loading...

Latest Photos