ஃபோர்டு ஜிடி சூப்பர் காரின் உற்பத்தி துவங்கியது!

ஃபோர்டு ஜிடி சூப்பர் காரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

கடந்த ஆண்டு நடந்த டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் புதிய ஃபோர்டு ஜிடி சூப்பர் கார் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், 1966ம் ஆண்டு லீமான்ஸ் கார் பந்தயத்தில் ஃபோர்டு நிறுவனம் வெற்றி பெற்றதின் 50ம் ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் விதத்தில், 2016ம் ஆண்டு டிசம்பரில் உற்பத்திக்கு செல்லும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

அதன்படி, புதிய ஃபோர்டு ஜிடி சூப்பர் கார் தயாரிப்புக்கு பக்கபலமாக இருந்த கனடா நாட்டின் மல்டிமேட்டிக் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.உற்பத்தி பிரிவில் இருந்து முதல் ஃபோர்டு ஜிடி கார் வெளிவந்ததை, அங்கு கூடியிருந்த பணியாளர்கள் கரகோஷம் எழுப்பி கொண்டாடினர்.

சம்பிரதாயதமாக முதல் ஃபோர்டு ஜிடி காரை அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ராஜ் நாயர் உற்பத்தி பிரிவில் இருந்து வெளியில் ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்தினார். முதல் ஃபோர்டு ஜிடி கார் கருப்பு வண்ணத்தில் ஆரஞ்ச் வண்ண வரிக்கோடுகள் கொண்டதாக வெளிவந்தது.

முதலில் 500 கார்கள் விற்பனைக்கு செல்லும் என்று ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில், முன்பதிவும் துவங்கப்பட்டதையடுத்து, இந்த காரை வாங்குவதற்கு போட்டா போட்டி நிலவியது. மொத்தம் விற்பனை செய்யப்பட இருக்கும் 500 கார்களுக்கு 6,500 விண்ணப்பங்கள் குவிந்தன.

மேலும், விண்ணப்பத்தை அளிக்கும்போது ஃபோர்டு ஜிடி காரை ஏன் சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை வீடியோவில் பதிவு செய்து அனுப்பவும் வாங்க விரும்பியவர்களிடம் ஃபோர்டு கேட்டுக் கொண்டது. அதன்படி, பல கட்ட வடிகட்டல்களுக்கு பின்னர், தகுதியுடைய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபோர்டு ஜிடி சூப்பர் கார் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது.

விண்ணப்பம் அளித்த வாடிக்கையாளர்களை ஏமாற்றம் தரக்கூடாது என்ற எண்ணத்தில் தற்போது ஃபோர்டு ஜிடி காரின் உற்பத்தியை 500ல் இருந்து 1,000 என்ற எண்ணிக்கையில் உயர்த்த முடிவு செய்துள்ளது ஃபோர்டு கார் நிறுவனம்.

2016 முதல் 2018 வரை முதல் லாட்டில் 500 கார்களும், 2018 முதல் 2020 வரை இரண்டாவது லாட்டில் 500 கார்களும் உற்பத்தி செய்ய ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஃபோர்டு ஜிடி சூப்பர் கார் முழுவதும் கார்பன் ஃபைபர் பாகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் இருக்கும் 3.5 லிட்டர் ஈக்கோபூஸ்ட் வி6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 600 பிஎச்பி பவரை அள்ளி வழங்க வல்லது. 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

காரின் எடைக்கும், எஞ்சின் பவரை வழங்கும் திறனுக்குமான விகிதாச்சாரத்தில் மிகுந்த செயல்திறன் மிக்க காராக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.2.40 கோடி விலை மதிப்பில் விற்பனைக்கு வருகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Among the first batch of the Ford GT, one will be going to Ford Chairman Bill Ford.
Please Wait while comments are loading...

Latest Photos