ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் சிக்னேச்சர் எடிசன் அறிமுகம்!

Written By:

பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் சிறப்பு பதிப்பு மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்கள் உள்ளன.

இந்த புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் தனித்துவமான அம்சங்களை தொடர்ந்து விரிவாக காணலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் வருகையையடுத்து, கடும் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு துவக்கத்தில் ஈக்கோஸ்போர்ட் பிளாக் எடிசன் என்ற ஸ்பெஷல் மாடலை ஃபோர்டு அறிமுகம் செய்தது. அந்த பிளாக் எடிசன் மாடலில் தற்போது கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து இந்த சிக்னேச்சர் எடிசன் மாடலை ஃபோர்டு களமிறக்கியிருக்கிறது.

பெயருக்கு ஏற்றாற்போல் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் கருப்பு வண்ணக் கலவையிலான பல ஆக்சஸெரீகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் சிக்னேச்சர் எடிசன் என்பதை தனித்துவமாக காட்டுவதற்கான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பனி விளக்குகளுக்கு கீழே புதிய எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குள் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

சைடு மிரர்கள், பனி விளக்குகள் அறை, 16 இன்ச் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் என அனைத்தும் கருப்பு வண்ண அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. முன்புற, பின்புறத்திலும் கருப்பு வண்ண பம்பர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 

கருப்பு வண்ண இன்டீரியர் கவர்கிறது. மேலும், விளக்கொளி பின்னணி கொண்ட இலுமினேட்டேட் ஸ்கஃப் பிளேட், சிவப்பு நிற தையல்களுடன் கருப்பு நிற சீட் கவர்கள் இன்டீரியரின் மதிப்பை உயர்த்துகின்றன.

இந்த புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மாடல் பிளாக் டைட்டானியம் என்ற வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இந்த மாடலில் சேர்க்கப்பட்டிருக்கும் கூடுதல் ஆக்சஸெரீகளின் மதிப்பு ரூ.37,894 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட பிளாக் டைட்டானியம் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

 

 

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் சிக்னேச்சர் எடிசன் மாடல் ரூ.9,26,194 என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலத்தில் காம்பேக்ட் எஸ்யூவி கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்கள இந்த மாடல் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Ford Introduces EcoSport Black Signature Edition For 2016 Festive Season. Read the complete details in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos