ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் விலை ரூ.2.82 லட்சம் தடாலடியாக குறைப்பு!

Written By:

இந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வந்த புதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனரை பார்த்து புளித்து போன கண்களுக்கு, இந்த புதிய ஃபோர்டு எண்டெவர் மிகச் சிறந்த மாற்றாக தெரிந்ததால், வாடிக்கையாளர்களும் நல் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இதன்மூலமாக, விற்பனையில் மார்க்கெட் லீடராக இருந்த டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கடும் நெருக்கடியை தந்து வருகிறது. ஆனால், ஃபோர்டு எண்டெவரின் விலையை சற்று அதிகம் நிர்ணயம் செய்துவிட்டதாக வாடிக்கையாளர்களிடத்தில் ஏமாற்றம் இருந்தது. அந்த ஏமாற்றத்தை போக்கும் விதத்தில், தற்போது போர்டு எண்டெவரின் சில வேரியண்ட்டுகளின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.

2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஆட்டோமேட்டிக் மாடலின் [டிரென்ட் வேரியண்ட்] விலை ரூ.1.72 லட்சம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ரூ.25,00,800 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த வேரியண்ட் இனி ரூ.23,78,000 விலையில் விற்பனை செய்யப்படும்.

2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் மாடலின் [டிரென்ட் வேரியண்ட்] விலை ரூ.2.82 லட்சம் அதிரடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ரூ.26,60,000 விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த வேரியண்ட் இனி ரூ.23,78,000 விலையில் விற்பனை செய்யப்படும்.

அதேபோன்று, 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஆட்டோமேட்டிக் மாடலின் டிரென்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.72 லட்சம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ரூ.27,65,000 விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த வேரியண்ட் இனி ரூ.25,93,000 விலையில் விற்பனை செய்யப்படும்.

அதேநேரத்தில், அனைத்து வசதிகளும் கொண்ட டைட்டனியம் டாப் வேரியண்ட்டுகளின் விலையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஏற்கனவே இருந்த அதே விலையில் விற்பனை செய்யப்படும். புதிய விலை விபர அட்டவணையை கீழே காணலாம்.

பண்டிகை காலத்திற்காக இந்த விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. எனினும், பண்டிகை காலம் முடிந்த பின்னர் விலை ஏற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உண்டு.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Tuesday, September 27, 2016, 16:42 [IST]
English summary
New Ford Endeavour Price Slashed. Read the revised price details in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos