ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் கார்களின் பேஸ் மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்!

Written By:

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்கு ஏதுவாக விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், பல முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது கார் மாடல்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ஃபோர்டு நிறுவனமும் கார்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில், தனது ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்களின் பேஸ் மாடல்களில் டியூவல் ஏர்பேக்குகளை அண்மையில் நிரந்தர பாதுகாப்பு ஆக்சஸெரீயாக சேர்த்தது. இதைத்தொடர்ந்து, தற்போது இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவற்றை ஆப்ஷனலாக சேர்த்துள்ளது.

ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் கார்களின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் டிரென்ட் ப்ளஸ் வேரியண்ட்டுகள் இனி இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவற்றுடன் கிடைக்கும். பிரேக் பவரை அனைத்து சக்கரங்களுக்கும் தேவையான அளவு செலுத்துவதே இபிடி தொழில்நுட்பத்தின் பணி.

சக்கரங்களின் சுழல் வேகத்தை கணித்து சரியான விகிதத்தில் பிரேக் பவரை விட்டு விட்டு செலுத்தி, காரை நிறுத்தும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அவசர காலங்களில் மிகுந்த பயனை தரும். அதாவது, கார் சக்கரங்கள் வழுக்கிச் செல்லாமல் இருப்பதற்கும், விரைவாக காரை நிறுத்துவதற்கும் உதவும்.

இந்த இரண்டு தொழில்நுட்பங்களும் இடம்பெற்று இருக்கும் ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்களின் டிரென்ட் வேரிண்ட் சாதாரண வேரியண்ட்டைவிட ரூ.12,000 மட்டுமே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ காரின் பெட்ரோல் மாடலின் டிரென்ட் வேரியண்ட் ரூ.4.54 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்தும், ஆஸ்பயர் பெட்ரோல் மாடலின் டிரென்ட் வேரியண்ட் ரூ.5.28 லட்சம் ஆரம்ப விலையில் இதுவரை கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Ford has equipped the Figo and the Aspire base models (Trend) with optional ABS, which will cost Rs 12,000 more.
Please Wait while comments are loading...

Latest Photos