200 டன் பாரம் சுமக்கும் மிகப்பெரிய டிரக் இந்தியா வந்தது!

Written By:

உலகின் அதிக எடை சுமக்கும் திறன் கொண்ட பிரம்மாண்ட டிரக் மாடலை ஆந்திராவை சேர்ந்த திரிவேணி எர்த் மூவர்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்த ராட்சத டிரக்கை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மலை விழுங்கி மகாதேவன் போல காட்சியளிக்கும் இந்த டிரக் தென்னிந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் பிரம்மாண்ட டிரக் மாடலாக குறிப்பிடப்படுகிறது. சுரங்கப் பணிகள், நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள், தொழிற்சாலைகளில் கனரக தளவாடங்களை எடுத்துச் செல்லும் பணிகளுக்கு இந்த டிரக் பயன்படுத்தப்படுகிறது.

ஆந்திர மாநிலம் போலவரத்தில் உள்ள சுரங்கப் பணிகளுக்கு இந்த டிரக் பயன்படுத்தப்படும் என்று திரிவேணி எர்த் மூவர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெலாஸ் - 7530 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த டிரக் மாடல் 13.39 மீட்டர் நீளமும், 7.82 மீட்டர் அகலமும், 6.65 மீட்டர் உயரமும் கொண்டது.

 

அதிக எடை சுமக்கும் இந்த டிரக்கில் 2,300 எச்பி பவரையும், 9,054 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய 60 லிட்டர் வி12 டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, இந்த எஞ்சின் 180 முதல் 220 டன் வரை பாரத்தையும், வண்டியின் எடையையும் சேர்த்து 330 டன் வரை நகர்த்தும் திறன் கொண்டது.

அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லும். இந்த டிரக்கின் டர்னிங் ரேடியஸ் 15 மீட்டர்கள். 

இந்த பிரம்மாண்ட டிரக்கை முக்கிய பாகங்களாக தருவித்து சுரங்கம் அமைந்துள்ள இடத்திலேயே வைத்து அசெம்பிள் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. ஏனெனில், இதுபோன்ற பிரம்மாண்ட வாகனங்கள் இந்த முறையில்தான் அசெம்பிள் செய்யப்படும்.

சரி, இந்தியாவிலேயே இதுதான் மிகப்பெரிய டிரக் மாடலா என்கிறீர்களா? இல்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடேட் சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் கொமட்சூ டிரக்குகள் 240 டன் வரை பாரம் சுமக்கும் திறன் கொண்டவை. இது லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

அதேநேரத்தில், பெலாரஸ் நிறுவனம் தயாரிக்கும் பெலாஸ் 75710 என்ற டிரக்தான் உலகிலேயே அதிக பாரம் சுமக்கும் திறன் கொண்டது. இந்த டிரக் அதிகபட்சமாக 450 டன் எடையை ஒரே நேரத்தில் சுமந்து செல்லும். மேலும், இந்த டிரக் சோதனை ஓட்டத்தின்போது 503 டன் எடையை சுமந்து சென்று வியக்க வைத்தது.

Story first published: Tuesday, September 20, 2016, 14:54 [IST]
English summary
Gigantic 240 ton Belaz truck in South India. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos