புதிய ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

புதிய ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் மாறுதல்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 9வது தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் காருக்கு போட்டியாக வந்திருக்கும் இந்த புதிய ஹோண்டா அக்கார்டு கார். இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய தலைமுறை ஹோண்டா அக்கார்டு கார் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஹோண்டா நிறுவனத்தின் என்எஸ்எக்ஸ் ஸ்போர்ட்ஸ் காரின் டிசைன் தாத்பரியங்கள் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வலுவான க்ரோம் க்ரில் அமைப்பு, மிரட்டலான பம்பர்கள், நவீனத்துமான ஹெட்லைட் அமைப்புடன் கவர்கிறது இதன் முகப்பு. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனிவிளக்குகள், 18 இன்ச் அளவுடைய டைமன்ட் கட் அலாய் வீல்கள் என வசீகரிக்கும் அம்சங்கள் ஏராளம்.

இந்த காரின் இன்டீரியரும் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஹோண்டாவின் தரம் இன்டீரியரை மிகவும் பிரமியமாக காட்டுகிறது. இரண்டு மின்னணு திரைகள் கொண்ட சென்டர் கன்சோல் அமைப்பு உள்ளது. உயர்தர இருக்கைகள், வசதிகள் என வாடிக்கையாளர்களை கவரும் விஷயங்கள் நிரம்பியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், கண்ணாடி கூரை அமைப்பு, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த காரின் மிக முக்கிய அம்சம், பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் என இரண்டு பொறிகளில் இயங்கும் ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக வந்திருப்பதே. இந்த காரில் 145 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 184 பிஎச்பி பவரையும், 315 என்எம் டார்க்கையும் வழங்கும் மின் மோட்டாரும் உள்ளது.

1.3 KWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி மூலமாக மின் மோட்டாருக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. இந்த ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட காரில் இ- சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல் எஞ்சின், மின் மோட்டாரை தனித்தனியாகவும், சேர்ந்த செயல்படும் வகையில் மூன்று விதமான டிரைவிங் ஆப்ஷன்கள் உள்ளன.

ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட் காரில் 6 உயிர் காக்கும் காற்றுப்பைகள், பிரேக் பவரை சரியாக பிரித்தனுப்பும் இபிடி நுட்பத்துடன் இணைந்து செயலாற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார் கவிழாமல் செலுத்தும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், அதிக தரைபிடிமானத்தை வழங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல், தடம் மாறுவதை கண்காணித்து எச்சரிக்கும் லேன் கீப்பிங் அசிஸ்ட் போன்ற பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஆர்சிட் ஒயிட் பியர்ல், கிறிஸ்டல் பிளாக் பியர்ல், மாடர்ன் ஸ்டீல் மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் ஆகிய 4 வண்ணங்களில் தேர்வு செய்து கொள்ள முடியும். இந்த கார் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

ரூ.37 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். டொயோட்டா கேம்ரி காரின் ஹைபிரிட் மாடல் லிட்டருக்கு 19.16 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ரூ.30.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் நிலையில், ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட் கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்பதால், ரூ.6 லட்சம் வரை கூடுதலான விலையில் வந்திருக்கிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The Honda Accord hybrid has been launched in India at Rs 37 lakh ex-showroom (Delhi). The car launched in India is the ninth generation model. India received the first generation Accord back in 2001.
Please Wait while comments are loading...

Latest Photos