புதிய ஹோண்டா பிஆர்வி 7 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

By Saravana

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் இந்த எஸ்யூவி சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹோண்டா நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்ர் மற்றும் மாருதி எஸ் க்ராஸ் போன்ற மாடல்களுடன் போட்டி போடும். வடிவமைப்பு, வசதிகள், விலை என அனைத்திலும் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தர வந்திருக்கும் இந்த புதிய எஸ்யூவியின் பிரத்யேக படங்கள், சிறப்பம்சங்கள், மைலேஜ், விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

ஹோண்டா பிரியோ கார் தயாரிக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த எஸ்யூவி ஆசிய என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பது, இதன் பாதுகாப்பை பரைசாற்றும் விஷயமாக அமைந்துள்ளது.

வடிவம்

வடிவம்

இந்த கார் 4,456மிமீ நீளமும், 1,735மிமீ அகலமும், 1,666மிமீ உயரமும் கொண்டது. இந்த கார் 2,662மிமீ வீல் பேஸ் கொண்டது. இதனால், இந்த காரில் மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிசைன்

டிசைன்

பக்கவாட்டில் ஹோண்டா மொபிலியோ எம்பிவி காரின் சாயல் சிறிது தென்பட்டாலும், கூடுதல் ஆக்சஸெரீகள், உயர்த்தப்பட்ட பாடி ஆகியவை எஸ்யூவி தோற்றத்தை வழங்குகிறது. பெரிய ஏர்டேமிற்கு மேலாக அமைந்திருக்கும் இரட்டை பட்டை க்ரோம் க்ரில் எஸ்யூவி கம்பீரத்தை கொடுக்கிறது. காரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங்குகள், முன்னும், பின்னும் இருக்கும் ஸ்கிட் பிளேட்டுகள், ரூஃப் ரெயில்கள், வலிமையான பம்பர் அமைப்பு ஆகியவையும் எஸ்யூவி என்பதை அடித்துச் சொல்ல வைக்கிறது. எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் அழகு சேர்க்கிறது.

7 சீட்டர் மாடல்

7 சீட்டர் மாடல்

ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர், மாருதி எஸ் க்ராஸ் என இதன் போட்டி மாடல்கள் அனைத்துமே 5 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதி கொண்டவை. ஆனால், ஹோண்டா பிஆர்வி மட்டுமே இந்த காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் 7 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியுடன் வந்துள்ளது.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

வசதிகளை பொறுத்து பெட்ரோல் மாடலில் E,S,V,VX மற்றும் V CVT[ஆட்டோமேட்டிக் மாடல்] என்ற 5 வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் E,S,V மற்றும் VX என்ற 4 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

இன்டீரியர்

இன்டீரியர்

இந்த காரின் இன்டீரியர் மிகவும் பிரிமியமாக இருக்கிறது. அருமையான டேஷ்போர்டு அமைப்பு, 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், பீயேஜ் வண்ண இருக்கைகள், பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட சென்டர் கன்சோல் ஆகியவை கவர்கிறது.

 வசதிகள்

வசதிகள்

புளூடூத், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பாக்கெட்டில் சாவி இருந்தால் பட்டனை அழுத்தி எஞ்சினை ஸ்டார்ட் செய்யக்கூடிய புஷ் ஸ்டார்ட் வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், இரண்டாவது, மூன்றாவது வரிசைக்கான கூரையில் அமைக்கப்பட்ட ஏசி வென்ட்டுகள் மற்றும் டிரைவர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி ஆகியவை முக்கியமானவையாக இருக்கின்றன.

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

ஹோண்டா சிட்டி காரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இருவிதமான பெட்ரோல் மாடல்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

டீசல் மாடல்

டீசல் மாடல்

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 15.4 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. டீசல் மாடல் லிட்டருக்கு 21.6 கிமீ மைலேஜ் தரும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது. 42 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் உள்ளது.

வாவ் சொல்ல வைக்கும் வசதி

வாவ் சொல்ல வைக்கும் வசதி

சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் மாடலில் ஸ்டீயரிங் வீலுக்கு அருகில் பேடில் ஷிஃப்ட் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறப்பான வசதியாக அமையும்.

பூட் ரூம்

பூட் ரூம்

மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பு கொண்டிருப்பதால், பொருட்கள் வைப்பதற்கான இடவசதி குறைவுதான். ஆனால், மூன்றாவது வரிசை இருக்கை மடக்கினால் 691 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் கிடைக்கும்.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

இந்த கார் 201மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் எனப்படும் தரை இடைவெளி கொண்டது. எனவே, வேகத்தடைகளை கண்டு அஞ்ச வேண்டியிருக்காது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

ஒயிட் ஆர்சிட் பியர்ல், அலபாஸ்டர் சில்வர் மெட்டாலி, டஃபேட்டா ஒயிட், கார்னேலியன் ரெட் பியர்ல், அர்பன் டைட்டானியம் மெட்டாலிக் மற்றும் கோல்டன் பிரவுன் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

டீசல் மாடலின் அனைத்து வேரியண்ட்டுகளிலும், பெட்ரோல் மாடலின் பேஸ் வேரியண்ட்டை தவிர்த்து பிற அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு வசதியாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. டாப் வேரியண்ட்டுகளில் மலைப்பாதையில் செல்லும்போது கார் பின்னோக்கி நகர்வதை தடுக்கும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், அதிக நிலைத்தன்மையுடன் செலுத்துவதற்கான வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன.

பெட்ரோல் மாடல் விலை விபரம்

பெட்ரோல் மாடல் விலை விபரம்

  • E வேரியண்ட்: ரூ.8.75 லட்சம்
  • S வேரியண்ட்: ரூ.9.90 லட்சம்
  • V வேரியண்ட்: ரூ.10.90 லட்சம்
  • VX வேரியண்ட்: ரூ.11.84 லட்சம்
  • V CVT ஆட்டோமேட்டிக் வேரியண்ட்: ரூ.11.99 லட்சம்
  • குறிப்பு: அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை
  •  டீசல் மாடல் விலை விபரம்

    டீசல் மாடல் விலை விபரம்

    • E வேரியண்ட்: ரூ.9.90 லட்சம்
    • S வேரியண்ட்: ரூ.10.99 லட்சம்
    • V வேரியண்ட்: ரூ.11.85 லட்சம்
    • VX வேரியண்ட்: ரூ12.90 லட்சம்
    • குறிப்பு: அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை
    • முன்பதிவு நிலவரம்

      முன்பதிவு நிலவரம்

      இதுவரை 500 பேர் இந்த புதிய பிஆர்வி எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Honda has launched its first compact SUV, the BR-V in India. Prices for the new Honda BR-V start at Rs. 8.75 lakhs, ex-showroom (Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X