விரைவில் இந்தியா வரும் புதிய ஹோண்டா சிட்டி கார்!

விரைவில் புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

ஹோண்டா நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் மாடல் ஹோண்டா சிட்டி. அந்த காருக்கான மவுசு அனைவரும் அறிந்தததே. டிசைன், தரம், வசதிகள் என அனைத்திலும் நிறைவான கார்.

இந்த நிலையில், மாருதி சியாஸ் காரால் ஹோண்டா சிட்டி காருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், வடிவமைப்பு, வசதிகளில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புத்தாண்டு ரிலீஸ்!

வரும் ஜனவரி மாதம் புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா கிரெய்ஸ் செடான் காரின் அடிப்படையிலான மாடலாக புதிய ஹோண்டா சிட்டி கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

சோதனை ஓட்டம்!

மேலும், சீனாவிலிருந்து இரண்டு கார்களை ஹோண்டா நிறுவனம் தனது தாயகமான ஜப்பானில் இறக்குமதி செய்து சாலை சோதனை ஓட்டங்கள் நடத்தி வருகிறது. இந்த சோதனைகள் நிறைவடையும் நிலையில் இருப்பதால், விரைவில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன்

புதிய ஹோண்டா சிட்டி காரின் டிசைனில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் செய்யப்பட்டு புதிய மாடலாகவே இருக்கும். புதிய ஹெட்லைட், பம்பர், க்ரில் அமைப்புடன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகளும் புதிய ஹோண்டா சிட்டி காரில் கொடுக்கப்பட்டிருக்கும்.

கூடுதல் வசதிகள்

உட்புறத்திலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஹோண்டா அக்கார்டு காரில் கொடுக்கப்பட்டிருக்கும் அதே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரிலும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் கூகுள் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது என்று நம்பலாம். தற்போது வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வரும். பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

வடிவமைப்பு, வசதிகளில் மேம்படுத்தப்பட்டு வரும் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலையும் சற்று கூடுதலாக நிர்ணயிக்கப்படும். மாருதி சியாஸ் கார் நெருக்கடி ஒருபுறம். மறுபுத்தில் அடுத்த ஆண்டு புதிய ஹூண்டாய் வெர்னா காரும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனவே, இந்த புதிய ஹோண்டா சிட்டி மாடலை களமிறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The Honda City sedan is set to receive a mid-life upgrade as Honda attempts to take back its crown from the Maruti Ciaz.
Please Wait while comments are loading...

Latest Photos