புதிய ஹோண்டா சிவிக் செடானின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

விரைவில் வெளியாக உள்ள ஹோண்டா சிவிக் செடானின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

ஹோண்டா சிவிக் செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம் தயாரித்து வழங்கும் ஹோண்டா சிவிக் செடான், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் ஸ்பை செய்யபட்டது.

ராஜஸ்தான் உற்பத்தி ஆலையில் ஸ்பை செய்யபட்ட ஹோண்டா சிவிக் செடான், இந்த மாடலின் இன்டர்நேஷனல் வேரியன்ட் ஆகும். இது இங்கு சோதனை நடவடிக்கைகளுக்குகாக உள்ளதாக தெரிகிறது.

லீக் செய்யப்பட்ட படங்கள்;

லீக் செய்யப்பட்ட படங்கள்;

லீக் செய்யப்பட்ட ஹோண்டா சிவிக் செடான் படங்கள், இந்த மாடலின் முன் பகுதியையும், சில இன்டீரியர் பகுதிகளையும் வெளிபடுத்தும் வகையில் உள்ளது.

முன் தோற்றம்;

முன் தோற்றம்;

ஹோண்டா சிவிக் செடானின் முன் பக்கத்தில், கிரில்லின் இரு பக்கத்திலும் ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் உள்ளது.

ஒரு குரோம் பூச்சு கொண்ட ஸ்ட்ரிப் ஹெட்லேம்ப்கள் மேலேயும், கிரில்லின் மையப்பகுதியின் குறுக்கேவும் செல்கிறது. இந்த ஸ்ட்ரிப்பின் மையப்பகுதியில் தான், ஹோண்டா பேட்ஜ் உள்ளது. ஹோண்டா பேட்ஜும் குரோம் பூச்சு கொண்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

ஹோண்டா சிவிக் செடானின் இன்டீரியர் ஸ்பை படங்கள், ஏசி கண்ட்ரோல்களின் மேல், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் கலர் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே இருப்பதை வெளிபடுத்துகிறது.

மேலும், இந்த படத்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் காணப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா சிவிக் செடானின் இன்டர்நேஷனல் வேரியன்ட், 1.5-லிட்டர் டர்போ சார்ஜ்ட் இஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளை கொண்டுள்ளது.

இந்தியாவிற்கான சிவிக்;

இந்தியாவிற்கான சிவிக்;

இந்திய வாகன சந்தைகளுக்கு என ஹோண்டா சிவிக் செடான், உற்பத்தி செய்யபட்டால், இது டீசல் இஞ்ஜின் தேர்வுடனும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spy Pics credit ; www.motorbeam.com

Most Read Articles
English summary
Honda's upcoming Civic sedan was spotted at its manufacturing plant in Rajasthan and its Spy Pics were released. Honda Civic spied inside factory is international variant of the car. It is here for testing purposes. Leaked images of car reveal front end of vehicle and some portions of interior. If Civic comes into production in India, diesel engine is also expected. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X