ஹோண்டா கார்களின் விலைகள் இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது - முழு விவரம்

By Ravichandran

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் வழங்கும் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு கார் நிறுவனங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு காலக்கட்டத்தில், அவ்வப்போது விலைகளை உயர்த்துவது வழக்கம். அந்த வகையில், ஹோண்டா நிறுவனம் தற்போது தங்களின் கார்களின் விலைகளை உயர்த்தியுள்ளனர்.

ஹோண்டா கார்கள் மீது செய்யபட்டுள்ள விலையேற்றம் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

விலையேற்றம்;

விலையேற்றம்;

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் செய்துள்ள விலையேற்றத்தின் படி, குறைந்தபட்ச விலையேற்றம் 6,300 ரூபாயாகவும், அதிகப்படியான விலையேற்றம் 14,250 ரூபாயாகவும் உள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள இந்த விலைகள், செப்டம்பர் பாதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

அமேஸ் காம்பேக்ட் செடான்;

அமேஸ் காம்பேக்ட் செடான்;

பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட ஹோண்டாவின் அமேஸ் காம்பேக்ட் செடானின் விலைகள் 6,300 ரூபாய் முதல் 6,550 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் இஞ்ஜின் உடைய ஹோண்டா அமேஸ் விலைகள் 6,500 ரூபாய் முதல் 6,700 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரியோ;

பிரியோ;

ஹோண்டா பிரியோ மாடலின் விலைகள், 6,900 ரூபாய் முதல் 7,600 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சிட்டி செடான்;

சிட்டி செடான்;

பெட்ரோல் இஞ்ஜின் உடைய ஹோண்டா சிட்டி செடானின் விலைகள் 11,000 ரூபாய் முதல் 11,750 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல் இஞ்ஜின் கொண்ட ஹோண்டா சிட்டி செடானின் விலைகள் 11,550 ரூபாய் முதல் 12,150 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பிஆர்வி;

பிஆர்வி;

ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவிகளின் விலைகளும் உயர்ந்துள்ளது. டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஹோண்டா பிஆர்வி விலைகள், தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலைகளிலிருந்து 9,900 ரூபாய் முதல் 14,250 வரை கூட்டப்பட்டுள்ளது. பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்ட ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவியின் விலைகள், 13,350 ரூபாய் முதல் 14,050 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜாஸ்;

ஜாஸ்;

பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட ஹோண்டா ஜாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக்கின் விலைகள், 9,300 ரூபாய் முதல் 9,950 ரூபாய் வரை கூடியுள்ளது. டீசல் இஞ்ஜின் உடைய ஹோண்டா ஜாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக்கின் விலைகள் 9,850 ரூபாய் முதல் 10,600 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிஆர்வி;

சிஆர்வி;

ஹோண்டா சிஆர்வி மாடலின் விலைகளும் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலைகளில் இருந்து, 14,100 ரூபாய் வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிற முக்கிய செய்திகள்;

பிற முக்கிய செய்திகள்;

டாடா மோட்டார்ஸ் வழங்கும் 'ஹர் வீக் தீவாளி' சலுகைகள் அறிமுகம்

செப்டம்பரில் கார் மற்றும் டூ வீலர்கள் மீது அட்டகாசமான சலுகைகள்

செப்டம்பரில் செவர்லே கார்கள் மீது 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகள்

Most Read Articles
English summary
Honda Cars India decided to hike prices of their portfolio in India. New ex-showroom prices will be implemented from mid-September. Least amount to be increased is Rs. 6,300, and the maximum price hike is Rs. 14,250. Amaze prices are hiked from Rs.6,300 to Rs.6,700. BR-V will cost over Rs.9,900 to Rs.14,250 over current ex-showroom prices. To know more, check here...
Story first published: Wednesday, September 21, 2016, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X