இந்தியா வரும் புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி அறிமுகம்!

Written By:

எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் ரக கார்களுக்கான வரவேற்பு உலக அளவில் அதிகரித்து காணப்படுகிறது. இதற்காக, ஹோண்டா கார் நிறுவனம் தொடர்ந்து எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் ரக கார்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில், தற்போது புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல் ஒன்றை ஹோண்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய கார் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா ஜாஸ் காரின் அடிப்படையிலான காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தென் அமெரிக்க வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

வலிமையான க்ரில் அமைப்பு, ஸ்கிட் பிளேட் போன்ற எஸ்யூவி வகை அம்சங்களுடன் ஜாஸ் காரின் சாயல் இல்லாத வகையில் மாற்றம் செய்துள்ளனர். ஹெட்லைட்டுகளின் டிசைன் மாற்றம் கண்டிருக்கிறது. அத்துடன், இரு ஹெட்லைட்டுகளுக்கும் இடையில் க்ரோம் பட்டையுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

பக்கவாட்டில் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் கொடுக்கப்பட்டு எஸ்யூவி வகையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூஃப் ரெயில்கள், வலுவாக தோன்றும் அலாய் வீலகள் போன்றவையும் சிறப்பு சேர்க்கின்றன.

பின்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. புதிய பம்பர் அமைப்பு, பிளாஸ்டிக் கிளாடிங் சட்டம் மற்றும் ஃபாக்ஸ் அலுமினியம் ஸ்கிட் பிளேட் போன்றவையும் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

இன்டீரியரில் பெரும்பான்மையான அமைப்பும், பாகங்களும் ஜாஸ் காரை ஒத்திருக்கிறது. உற்பத்தி செலவை குறைக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

 

 

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் 89 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்படும். அதேபோன்று, அமேஸ், சிட்டி போன்ற கார்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் ஐடிடெக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காம்பேக்ட் ரக எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்படும். டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் நடந்து வரும் ஆட்டோ ஷோவில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
The production ready Honda WR-V will hit the Indian shores during mid 2017 and will rival Maruti Brezza and Ford EcoSport.
Please Wait while comments are loading...

Latest Photos