புதுப்பொலிவுடன் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் அறிமுகம் - படங்கள், விபரங்கள்!

Written By:

பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் துவங்கியிருக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் அறிமுகம் செய்யப்பட்டது.

வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த காரின் படங்கள், விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

புதுப்பொலிவு பெற்றிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா காரின் முகப்பில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. முகப்பில் தற்போதைய க்ரோம் பட்டை க்ரில் அமைப்பு சற்று மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஹெட்லைட்டிலும் சிறிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

பனி விளக்குகள் தற்போது செவ்வக வடிவில் மாற்றம் கண்டுள்ளது. ஏர் இன்டேக் மற்றும் பம்பர் அமைப்பிலும் சிறிய அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது, ஹூண்டாய் க்ரெட்டா காரின் முக வசீகரம் குலைந்துவிடாதபடி கவனமாக மாற்றங்களை புகுத்தியிருக்கின்றனர். பின்புறத்தில் டெயில் லைட்டுகள் மற்றும் பம்பரில் மறுவடிவமைப்புடன் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இன்டீரியரில் சில கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பேக்லிட் திரை கொண்ட க்ளைமேட் கன்ட்ரோல் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது.

பிரேசில் மார்க்கெட்டில் பெட்ரோல் மற்றும் எத்தனால் எரிபொருளில் இயங்கும் 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் எஞ்சின் ஆப்ஷன்களில் அங்கு விற்பனைக்கு செல்கிறது. 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 130 பிஎச்பி பவரையும், 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 166பிஎச்பி பவரையும் அளிக்க வல்லதாக இருக்கும்.

1.6 லிட்டர் எஞ்சின் மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், 2.0 லிட்டர் மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் மட்டும் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

அடுத்த சில வாரங்களில் புதுப்பொலிவு பெற்ற ஹூண்டாய் க்ரெட்டா காரின் உற்பத்தி பிரேசில் நாட்டில் துவங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் அங்கு விற்பனைக்கு செல்ல இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பொலிவு பெற்றிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா காருக்கான முக்கிய பாகங்கள் இந்தியாவிலுள்ள சப்ளையரிடமிருந்து அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும், அடுத்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Hyundai Creta facelift has been officially unveiled at the 2016 Sao Paulo Auto Show in Brazil.
Please Wait while comments are loading...

Latest Photos