வருகிறது 7 சீட்டர் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி?

Written By:

கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்துக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருவதுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

க்ரெட்டா எஸ்யூவிக்கு கிடைத்த வரவேற்பை தக்க வைக்கும் விதத்தில் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலையும், குறைவான விலை கொண்ட புதிய டீசல் ஆட்டோமேட்டிக் மாடலையும் அறிமுகம் செய்தது.

மேலும், அறிமுகம் செய்யப்ப்டடு ஓர் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, ஆனிவர்சரி ஸ்பெஷல் எடிசன் மாடலையும் ஹூண்டாய் அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடல் வரும் 10ந் தேதி பிரேசில் நாட்டில் துவங்க இருக்கும் சாவ் பாவ்லோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

எல்லோரும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரை உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதில், விசேஷம் என்னவெனில், அடுத்த தலைமுறை மாடல் 5 சீட்டர் மட்டுமின்றி 7 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியுடன் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலமாக, ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் மதிப்பு மேலும் அதிகரிக்கும். மேலும், 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் ஹூண்டாய் நம்புகிறது.

தற்போது ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி மட்டுமே 7 சீட்டர் மாடலில் கிடைக்கிறது. ஆனாலும், அது மொபிலியோவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல் என்பதும், அதன் டிசைன் பிரதிபலிப்புகளும் வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி 7 சீட்டர் மாடலில் வந்தால் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

English summary
Hyundai is already working on the next-generation Creta compact SUV and the SUV will be offered in seven-seater variant.
Please Wait while comments are loading...

Latest Photos