ஹூண்டாய் க்ரெட்டா பிக்கப் டிரக் கான்செப்ட் மாடல் அறிமுகம்!

ஹூண்டாய் க்ரெட்டா காரின் அடிப்படையிலான புதிய பிக்கப் டிரக் ரக கான்செப்ட் மாடலின் படங்களையும், விபரங்களையும் இங்கே காணலாம்.

Written By:

ஹூண்டாய் க்ரெட்டா காரின் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடல் பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் நடந்து வரும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது குறித்த செய்தியை டிரைஸ்பார்க் தளத்தில் படித்திருப்பீர்கள்.

அந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வரும் மற்றொரு மாடல் ஹூண்டாய் க்ரெட்டா காரின் அடிப்படையிலான புதிய பிக்கப் டிரக் ரக கான்செப்ட் மாடல். அதன் படங்களையும், விபரங்களையும் இங்கே காணலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்டிசி என்ற பெயரில் இந்த கான்செப்ட் மாடல் குறிப்பிடப்படுகிறது. தென்கொரியாவில் உள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் டிசைன் சென்டரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மிகவும் சிறப்பாக டிசைன் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, இது யூனிபாடி கட்டமைப்பு கொண்டுள்ளது.

பிற பிக்கப் டிரக்குகளில் கேபின் தனி அமைப்பாகவும், பக்கெட் என்று சொல்லக்கூடிய பொருட்கள் வைப்பதற்கான இடவசதி தனி அமைப்பாகவும் தெரியும். ஆனால், இது ஒரே அமைப்பாக யூனிபாடி என்ற முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்டிசி ஸ்போர்ட்ஸ் பிக்கப் டிரக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், வலிமையான க்ரில் அமைப்பு, ஸ்கிட் பிளேட்டுகளுடன் மிரட்டலாக இருக்கிறது.

பக்கவாட்டில் 21 இன்ச் அலாய் வீல்கள், பைரல்லி டயர்கள், ரூஃப் ரெயில்கள், அசத்தலான கேபின் அமைப்புடன் கவர்ச்சியாக உள்ளது.

இந்த பிக்கப் டிரக் 4.65 மீட்டர் நீளமும், 1.85 மீட்டர் அகலமும், 1.63 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 2.80 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிப்பவர்களுக்கு போதுமான இடவசதி கொண்ட கேபின், வசதிகள் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான 850 லிட்டர் கொள்ளளவு கொண்ட பக்கெட்டும் உள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்கள் பற்றிய விபரங்கள் இல்லை. ஆனால், தயாரிப்புக்கு கொண்டு செல்லும்போது 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் பயன்படுத்தப்படலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Hyundai showcased the STC pickup concept, based on the Hyundai Creta at the 2016 Sao Paulo Auto Show.
Please Wait while comments are loading...

Latest Photos