இனி ஹுண்டாய் கிரீட்டா எஸ்யூவியின் எஸ் வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்காது!

By Meena

நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய கார் நிறுவனமான ஹுண்டாயின் தயாரிப்புகளான வெர்னா, ஐ-10, ஐ-20 என பல மாடல்கள் மக்கள் மத்தியில் ஹிட் அடித்தவை. அவற்றில் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க மாடல் உள்ளது. அதுதான் கிரீட்டா. மாருதியைக் காட்டிலும் கூடுதலாக விற்பனை செய்து அண்மையில் சாதனை படைத்தது ஹுண்டாய் கிரீட்டா மாடல்.

காம்பேக்ட் எஸ்யூவி மாடலான அது விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த கார்களில் ஒன்று. அதே செக்மெண்டில் யூவி மாடலான மாருதி விட்டாரா பிரேஸாவின் விற்பனையை பின்னுக்குத் தள்ளிவிட்டு வாடிக்கையாளர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளது கிரீட்டா.

ஹூண்டாய் க்ரெட்டா கார்

இத்தனை பெருமைகள் இருந்தென்ன பிரயோஜனம்... அந்த காரின் குறிப்பிட்ட பெட்ரோல் மாடலின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது ஹுண்டாய் நிறுவனம். எஸ் டிரிம் என்ற மாடலுக்குத்தான் அந்த கதி ஏற்பட்டுள்ளது. ஹுண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் இருந்தும் கிரீட்டா எஸ் டிரிம் மாடல் நீக்கப்பட்டுள்ளது.

இதற்கு பின்னால் அதிர்ச்சியளிக்கும் வகையில் எந்தக் காரணமும் இல்லை. இ - பிளஸ் பெட்ரோல் மாடலை புதிதாக அறிமுகப்படுத்தியிருப்பதால்தான் எஸ் டிரிம் வகை கார்களின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது ஹுண்டாய் கம்பெனி.

இ - பிளஸ் மாடலின் விலை ரூ.9.99 லட்சமாக உள்ளது (தில்லி எக்ஸ் ஷோ ரூம் விலை).

தற்போது கிரீட்டா மாடலில் இ, இ - பிளஸ், எஸ் எக்ஸ், எஸ் எக்ஸ் பிளஸ் சிறப்பு எடிசன், எஸ் எக்ஸ் ஆட்டோமேடிக் ஆகிய 5 வகைகளில் பெட்ரோல் எஞ்சின் கார்கள் விற்பனைக்கு உள்ளன.

கிரீட்டாவில் மொத்தம் 3 எஞ்சின் மாடல்கள் உள்ளன. 1.6 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின்கள் உள்ளன. இதைத்தவிர புதிதாக ஆட்டோமேடிக் கியருடன் 1.6 லி்ட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு புதிய மாடல் ஒன்று அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது, 126 பிஎச்பி மற்றும் 256 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது.

மொத்தம் 6 கியர்கள் உள்ளன. குறிப்பிட்ட மாடல்களில் ஆட்டோ மேடிக் கியர் ஆப்ஷனுடன் உள்ளன. லெதர் சீட், வாய்ஸ் கன்ட்ரோல் நேவிகேஷன், ஆண்டி பிரேக் லாக் சிஸ்டம் (ஏபிஎஸ்), தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஏர் பேக் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் ஹுண்டாய் கிரீட்டா மாடல்களில் உள்ளன.

விலை ரூ.9.16 லட்சத்திலிருந்து ரூ.14.50 லட்சம் வரையாக உள்ளது (தில்லி எக்ஸ் ஷோ ரூம் விலை).

ஹுண்டாய் நிறுவனத்தின் இ - பிளஸ் மாடலும் செமயாக பிக் - அப் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
English summary
Rean in Tamil: Hyundai Discontinues A Petrol Variant Of The Creta In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X